273 ஆயதோர் அவதியின்கண் அருக்கன்சேய் அரசைநோக்கித் தீவினை தீயநோற்றார் என்னின்யார் செல்வ நின்னை நாயகம் உலகுக்கெல்லாம் என்னலாம் நலமிக்கோயை மேயினென் விதியே நல்கின் மேவலாகாதென் என்றான்      முரணுடைத் தடக்கை ஒச்சி முன்னவன் பின்வந்தேனை இருள்நிறப் புறத்தின் காறும் உலகெங்கும் தொடராகிக் குன்று அரணுடைத் தாகி உய்ந்தேன் ஆருயிர் துறக்கலாற்றேன் சரணுனைப் புகுந்தேன் என்னைத் தாங்குதல் தருமம் என்றான்      நாலு வேதமாம் நவையில் சாலியின் வேலி யன்னவன் மலையின் மேலுளான் சூலி தன்னருள் துறையின் முற்றினான் வாலி என்றுளான் வரம்பில் ஆற்றலான்      கழறு தேவரோடு அவுணர் கண்ணினின்று உழலும் மந்தரத்து உருவு தேயமுன் அழலும் கோள் அரா அகடு தேய்விடச் சுழலும் வேலையைக் கடையும் தோளினான்      நிழலும் நீருமாய் நெப்பும் காற்றுமென்று உலைவில் பூதம்நான் குடைய ஆற்றலான் அலையின் வேலைசூழ் கிடந்த ஆழிமா மலையின் நின்றும் இம்மலையின் வாவுவான்      கிட்டுவார் பொரக் கிடைக்கின் அன்னவர் பட்ட நல்வலம் பாகம் எய்துவான் எட்டு மாத்திரத்து இறுதி நாளும் உற்று அட்ட மூர்த்திதாள் பணியும் ஆற்றலான்      மெய்க்கொள் வாலினால் மிடல் இராவணன் தொக்க தோளுறத் தொடர்ப் படுத்தநாள் புக்கி லாதவும் பொழி அரத்த நீர் உக்கி லாதவும் உலகம் யாவதோ      அன்னவன் எமக்கு அரசனாக என்று இன்னவன் இளம்பதம் இயற்றுநாள் முன்னவன் குலப்பகைஞன் முட்டினான் மின்னெயிற்றுவாள் அவுணன் வெம்மையான்    |