275 தலைமையோடுநின் தாரமும் உனக்கின்று தருவென் புலமையோய் அவன் உறைவிடம் காட்டுஎன்று புகன்றான் (நட்புக்கோட்படலம் 20, 23, 25, 37, 40, 48, 50-52, 57, 59, 64, 67, 69, 71, 72) சீதை ஆபரணங்களைக்கண்டு ஸ்ரீராமர் இரங்கல் விருத்தம்-5-திபதை-4 ஏகவேண்டும் இந்நெறிஎன இனிது கொண்டேகி மாகம் நீண்டன குறுகிட நிமிர்ந்தன மரங்கள் ஆகஐந்தினோ டிரண்டின் ஒன்றுருவநின் அம்பு போகவே என்தன் மனத்திடர் போம் எனப்புகன்றான் ஆயமாமரம் அனைத்தையும் நோக்கிநின்றமலன் தூய வார்கணை துரப்பதோர் ஆதரம் தோன்ற சேய வானமும் திசைகளும் செவிடுறத் தேவர்க்கு ஏய்வினாத தோர் பயம்வர சிலையில்நாண் எறிந்தான் ஏழுமாமரம் உருவிக்கீழ் உலகம் என்றிசைக்கும் ஏழும் உண்டுபுக்குருவிப்பின் உடனடுத்தியன்ற ஏழிலா மையால் மீண்டதவ் இராகவன் பகழி ஏழுகண்டபின் உருவுமால் ஒழிவதன் றின்னும் (மராமரப்படலம் 1, 12, 16) அண்டமும் அகிலமும் அடைய அன்று அனலிடைப் பண்டு வெந்தன நெடும்பசை வறந்திடினும் வான் மண்டலம் தொடுவது அம்மலையின்மேல் மலைஎனக் கண்டனன் துந்துபிகடலனான் உடலரோ முட்டிவான் முகடுசென்றளவி இம்முடையுடல் கட்டிமால் வரையை வந்துறுதலும் கருணையான் இட்டசாபமும் எனக்குதவும் என்று இயல்பினின் பட்டவா முழுதும் பரிவினால் உரை செய்தான் கேட்டனன் அமலனும் கிளந்த வாறெலாம் வாட்டொழில் இளவலை இதனை மைந்தநீ ஓட்டென அவன்கழல் விரலின் உந்தினான் மீட்டது விரிஞ்சன்நாடுற்று மீண்டதே (துந்துபிப்படலம் 1, 14, 15) |