பக்கம் எண் :

276

உழையரின் உணர்த்துவதுளது என்றுன்னியோ
குழைபொரு கண்ணினாள் குறித்தது ஓர்ந்திலம்
மழைபொரு கண்ணினை வாரியோடுதன்
இழைபொதிந் திட்டனள் யாங்கள் ஏற்றனம்

தெரிவுற நோக்கினன் தெரிவை மெய்யணி
எரிகனல் எய்திய மெழுகின் யாக்கை போல்
உருகினன் என்கிலம் உயிருக்கு ஊற்றமாய்ப்
பருகினன் என்கிலம் பகர்வதென் கொல்யாம்

நல்குவது என்இனி நங்கை கொங்கையைப்
புல்கிய பூணுமக் கொங்கை போன்றன
அல்குலின் அணிகளும் அல்கு லாயின
பல்கலன் பிறவும் அப்படிவம் ஆனவே

விட்டபேர் உணர்வினை விளித்த என்கெனோ
அட்டன உயிரை அவ்அணிகள் என்கெனோ
கொட்டின சாந்தெனக் குளிர்ந்த என்கெனோ
சுட்டன என்கெனோ யாது சொல்லுகேன்

மோந்திட நறுமலர்ஆன மொய்ம்பினில்
ஏந்திட உத்தரியத்தை ஏய்ந்தன
சாந்தமு மாய் ஒளிதழுவப் போர்த்தலால்
பூந்துகி லாய அப்பூவை பூண்களே

ஈர்த்தன செங்கண்நீர் வெள்ளம் யாவையும்
பார்த்தன மயிர்ப்புறம் புளகம், பொங்குதோள்
வேர்த்தன என்கெனோ வெதும்பினான் என்கோ
தீர்த்தனை அவ்வழி யாது செப்புகேன்

விலங்கெழில் தோளினாய் வினையினேனும் இவ்
இலங்குவில் கரத்திலும் இருக்கவே அவள்
கலன்கழித் தனள் இது கற்புமேவிய
பொலன் குழைத் தெரிவையர் புரிந்துளோர்கள்யார்

வாள்நெடுங் கண்ணிஎன் வரவு நோக்கயான்
தாள்நெடுங் கிரியோடும் தடங்கள்தம்மொடும்
பூணொடும் புலம்பினென் பொழுது போக்கிஇந்
நாண்நெடும் சிலைசுமந்து உழல்வென் நாணிலேன்