277 விரும்பெழில் எந்தையார் மெய்ம்மை வீயுமேல் வரும்பழி என்றுயான் மகுடம் சூடலேன் கரும்பழி சொல்லியைப் பகைவன் கைக்கொள பெரும்பழி சூடினென் பிழைத்தது என்னரோ (கலன் காண்படலம் 3-9, 20, 21, 25) ஸ்ரீராமருக்குச் சுக்கிரீவன் துணிவுகூறுதல் விருத்தம்-6 - தரு-2 தாங்கினேன் இருத்திஇத் துயரம் தாங்கலாது ஏங்கிய நெஞ்சினன் இரங்கி விம்முவான் வீங்கிய தோளினாய் வினையினேன் உயிர் வாங்கினென் இவ்வணி வருவித்தே எனா அயனுடை அண்டத்தின் அப்புறத்தையும் மயர்வற நாடிஎன் வலியும் காட்டியுன் உயர்புகழ்த் தேவியை உதவற் பாலெனால் துயருழந்தயர்தியோ சுருதி நூல்வலாய் திருமகள் அனைய அத்தெய்வக் கற்பினாள் வெருவரச் செய்துள வெய்யவன் புயம் இருபதும் ஈர்ஐந்து தலையும் நிற்கஉன் ஒருகணைக் காற்றுமேர் உலகம் ஏழுமே ஈண்டுநீ இருந்தருள் ஏழொடு ஏழ்எனாப் பூண்டபேர் உலகங்கள் வலியின் புக்குஇடை தேண்டி அவ்வரக்கனைத் திருகித் தேவியைக் காண்டியான் இவ்வழிக் கொணர்வல் காவலோய் என்னுடைச் சிறுகுறை முடித்தல் ஈண்டொரீஇப் பின்னுடைத் தாயினும் ஆக பேதுறும் மின்னிடைச் சனகியை மீட்டு மீள்துமால் பொன்னுடைச் சிலையினாய் விரைந்து போய்என்றான் (கலன் காண்படலம் 11-14, 18) |