பக்கம் எண் :

278

ஸ்ரீராமரை வாலி நிந்தித்தல்

விருத்தம்-7-தரு-3

அவ்விடத்து ராமன்நீ அழைத்து வாலி ஆனதோர்
வெவ்விடத்தின் வந்துபோர் விளைக்கும்  ஏல்வைவேறு நின்று
எவ்விடத்துணிந் தமைந்ததென் கருத்து இதுஎன்றனன்
தெவ்வடக்கும் வென்றியானும் நன்றுஇதென்று சிந்தியா

எடுத்துப்பாரிடை எற்றுவென் பற்றிஎன்றிளவல்
கடித்தலத்தினும் கழுத்தினும் தன்னிரு கரங்கள்
மடுத்து மீக்கொண்ட வாலிமேல் கோலொன்று வாங்கித்
தொடுத்து நாணொடு தோளுறுத்து இராகவன் துரந்தான்

கார்உண் வார்சுவைக் கதலியின் கணியினைக் கழியச்
சேரும் ஊசியின் சென்றது நின்றதென் செப்ப
நீரும் நீர்தரும் நெருப்பும் வன்காற்றும் கீழ்நிவந்த
பாரும் சார்வலிபடைத்தவன் உரத்தை அப்பகழி

கண்ணுற்றான் வாலிநீலக் கார்முகில் கமலம்பூத்து
மண்ணுற்று வரிவில்ஏந்தி வருவதே போலும்மாலை
புணணுற்றது அனையசோரி பொறியொடும் பொடிப்ப நோக்கி
எண்ணுற்றாய் என்செய்தாய் என்றேசுவான் இயம்பலுற்றான்

வாய்மையும் மரபும் காத்து மன்உயிர் துறந்த வள்ளல்
தூயவன் மைந்தனேநீ பரதன்முன் தோன்றினாயே
தீமைதான் பிறரைக் காத்துத்தான் செய்தால் தீங்கன்றாமோ
தாய்மையும் அன்றிநட்பும் தருமமும் தழுவிநின்றாய்

கோவியல் தருமம் உங்கள் குலத்துதித்தோர் கட்கெல்லாம்
ஓவியத் தெழுதஒண்ணா உருவத்தாய் உடைமையன்றோ
ஆவியை சனகன் பெற்றஅன்னத்தை அமிழ்தின் வந்த
தேவியைப் பிரிந்தபின்னை திகைத்தனை போலும் செய்கை

அரக்கர் ஓர் அழிவுசெய்து கழிவரேல் அதற்கு வேறோர்
குரக்கினத் தரசைக் கொல்ல மனுநெறி கூறிற்றுண்டோ
இரக்க மெங் குகுத்தாய் என்பால் எப்பிழை கண்டாயப்பா
பரக்கழி இது நீபூண்டால் புகழையார் பரிக்கற் பாலார்