பக்கம் எண் :

279

கூட்டொருவரையும் வேண்டாக் கொற்றவ பெற்ற தாதை
பூட்டிய செல்வம் ஆங்கே தம்பிக்குக் கொடுத்துப் போந்து
நாட்டொரு கருமம் செய்தாய் எம்பிக்கிவ் வரசைநல்கிக்
காட்டொரு கருமம் செய்தாய் கருமம்தான் இதன் மேலுண்டோ

அறைகழல் அலங்கல் வீரர் ஆயவர் புரிவதாண்மைத்
துறை என லாயிற்றன்றே தொன்மையின் நன்னூற்கெல்லாம்
இறைவநீ என்னைச் செய்த தீதெனின் இலங்கை வேந்தன்
முறையல செய்தா னென்று முனிதியோ முனிவிலா தாய்

இருவர்போர் எதிருங்காலை இருவரும் நல்லுற்றாரே
ஒருவர்மேல் கருணை தூண்டி ஒருவர்மேல் ஒளிந்து நின்று
வரிசிலை குழைய வாங்கி வாயம்பு மருமத் தெய்தல்
தருமமோ பிறிதொன்றாமோ தக்கிலது என்னும் பக்கம்

வீரம் அன்று விதியன்று மெய்ம்மையின்
வாரம் அன்று நின் மண்ணினுக்கு என்உடல்
பாரம் அன்று பகையன்று பண்பழிந்து
ஈரம் இன்றி இதுஎன் செய்த வாறரோ

நூலியற்கையும் நுங்குலத் துந்தையர்
போலியற்கையும் சீலமும் போற்றலை
வாலியைப் படுத்தாய் அலை மன்அற
வேலியைப் பிரித்தாய் விறல் வீரனே

தாரம் மற்றொருவன் கொளத்தன் கையில்
பார வெஞ்சிலை வீரம் பழுதுற
நேரும் அன்று மறைந்துநி ராயுதன்
மார்பின் எய்யவோ வில்லிகல் வல்லதே
      (வாலி வதைப்படலம் 10, 63, 64, 81, 82, 84, 85, 87-90, 95, 96)

வாலி குற்றங்களை அவனுக்கு ஸ்ரீராமர் விரித்தல்

விருத்தம்-8 - தரு-4

பிலம்புக்காய் நெடுநாள் பெயராய் எனப்
புலம்புற் றுன்வழிப் போதலுற்றான்தனை
குலம்புக்கு ஆன்றமுதியர் குறிக்கொள்நீ
அலம்பொன் தாரவனே அரசு என்றலும்