280 பற்றி ஆன்ற படைத்தலை வீரரும் முற்றுணர்ந்த முதியரும் முன்பரும் எற்றும் நும்மரசு எய்துவையாம் எனக் கொற்ற நன்முடி கொண்டதிக் கோதிலான் கொல்ல லுற்றனை உம்பியைக் கோதவற்கு இல்லை என்பதுணர்ந்தும் இரங்கலை அல்லல் செய்யல் உனக்கபயம் பிழை புல்லல் என்னவும் புல்லலை பொங்கினாய் அன்னதன்மை அறிந்தும் அருளலை பின்னவன் இவன் என்பதும் பேணலை வன்னிதான் இடும் சாப வரம்புடைப் பொன்மலைக்கவன் நண்ணினான் போகலை ஈரம் ஆவதும் இற்பிறப் பாவதும் வீரம் ஆவதும் கல்வியின் மெய்ந்நெறி வாரம் ஆவதும் மற்றொருவன் புணர் தாரம் ஆவதைத் தாங்கும் தருக்கதோ தருமம் அன்றிது எனும் தகைத்தன்மையும் இருமையும் தெரிந்து எண்ணலை எண்ணினால் அருமை உம்பிதன் ஆருயிர்த் தேவியை பெருமை நீங்கினை எய்தப் பெறுதியோ தக்க இன்னதகாதன இன்னவென்று ஒக்க உன்னலர் ஆயின் உயர்ந்துள மக்களும் விலங்கே மனுவின் நெறி புக்கவேல் அவ்விலங்கும் புத்தேளிரே முன்புநின் தம்பிவந்து சரண்புக முறையிலோயைத் தென்புலத் துய்ப்பென் என்றுசெப்பி னன்செருவில் நீயும் அன்பினை உயிருக்காகி அடைக்கலம் யானும் என்றி என்பது கருதி அண்ணல் மறைந்து நின்றெய்த தென்றான் (வாலி வதைப்படலம் 98, 100, 102, 104, 105, 107, 118, 123) |