பக்கம் எண் :

281

ஸ்ரீராமரை வாலி வரங்கேட்டுக் கொள்ளல்

விருத்தம்-9-தரு-5

கவிகுலத் தரசுமன்னன் கட்டுரை கருத்துட் கொண்டான்
அவியுறு மனத்தனாகி அறத்திறன் அழியச் செய்யான்
புவியிடை அண்ணல் எண்பதெண்ணினில் பொருந்த முன்னே
செவியுறு கேள்விச் செல்வன் சென்னியின் இறைஞ்சிச் சொன்னான்

தாயென உயிர்க்குநல்கித் தருமமும் தகவும் சால்பும்
நீயென நின்றநம்பி நெறியினின் நோக்கும் நேர்மை
நாயென நின்றனம்பால் நவையற உணர லாமே
தீயென பொறுத்தி என்றான சிறியன சிந்தி யாதான்

இரந்தனன் பின்னும் எந்தை யாவதும் எண்ணல் தேற்றாக்
குரங்கெனக் கருதி நாயேன் கூறிய மனத்துக் கொள்ளேல்
அறந்தைவெம் பிறவி நோய்க்கும் அருமருந் தனைய அய்யா
வரந்தரும் வள்ளால் ஒன்று கேளென மறித்தும் சொல்வான்

மற்றின உதவி யுண்டோ வானினும் உயர்ந்த மானக்
கொற்றவ நின்னை என்னைக் கொல்லிய கொணர்ந்து தொல்லைச்
சிற்றினக் குரங்கி னோடும் தெரிவுறச் செய்த செய்கை
வெற்றரசு எய்தி எம்பி வீட்டரசு எனக்கு விட்டான்

ஓவிய உருவ நாயேன் உளதொன்று பெறுவ துன்பால்
பூவியல் நறவம் மாந்தி புந்திவே றுற்ற போழ்தில்
தீவினை இயற்று மேனும் எம்பிமேல் சீறி என்மேல்
ஏவிய பகழி என்னும் கூற்றினை எவல் என்றான்

அனுமன் என்பவனை ஆழிஐய நின்செய்ய செங்கைத்
தனுவென நினைதி மற்று என்தம்பி நின் தம்பி யாக
நினைதிஓர் துணைவர் இன்னோர் அனையவர் இலைநீ ஈண்டவ்
வனிதையை நாடிக் கோடி வானினும் உயர்ந்த தோளாய்
                     (வாலிவதைப்படலம் 124-126, 131, 132, 135)

வாலி சுக்கிரீவனுக்கு மதிசொல்லுதல்

விருத்தம்-10-தரு-6

என்றவற்கியம்பிப் பின்னர் இருந்தனன் இளவல் தன்னை
வன்றுணைத் தடக்கை நீட்டி வாங்கினன் தழுவி மைந்த