பக்கம் எண் :

282

ஒன்றுனக் குரைப்ப துண்டால உறுதியஃதுணர்ந்து கோடி
குன்றினும் உயர்ந்த தோளாய் வருந்தலை என்றுகூறும்

நிற்கின்ற செல்வம் வேண்டி நெறிநின்ற பொருள்க ளெல்லாம்
கற்கின்ற இவன்தன் நாமம் கருதுவ இவனைக் கண்டாய்
பொற்குன்ற மனைய தோளாய் பொதுநின்ற தலைமை நோக்கின்
ஏற்கொன்ற வலியே சாலும் இதற்கொன்றும் ஏது வேண்டா

மதவியல் குருங்குச்செய்கை மயர்வொடு மாற்றி வள்ளல்
உதவியை உன்னிஆவி உற்றிடத் துதவு கிற்றி
பதவியை எவர்க்கும் நல்கும் பண்ணவன் பணித்த யாவும்
சிதைவில் செய்து நொய்தின் தீவரும் பிறவி தீர்தி

அரசியல் பாரம் பூரித்து அயர்ந்தனை இகழாது ஐயன்
மரைமலர்ப் பாதம்நீங்கா வாழுதி மன்னர்என்பார்
எரிஎரனற் குரியார் என்றே எண்ணுதி எண்ணம் யாவும்
புரிதி சிற்றடிமைக்குற்றம் பொறுப்பர் என்றெண்ண வேண்டா

பாலமை தவிர்நீ என்சொல் பற்றுதி யாயின் தன்னின்
மேலொரு பொருளும் இல்லா மெய்ப்பொருள் வில்லும் தாங்கிக்
கால்தரை தேயநின்று கட்புலக் குற்றதம்மா
மால்தரும் பிறவி நோய்க்கு மருந்துஎன வணங்கு மைந்த

என்னுயிர்க் குறுதிசெய்தான் என்பதைஇறையும் எண்ணாது
உன்னுயிர்க் கிறுதி செய்தி இவற்கமர் உற்ற துண்டேல்
பொன்னுயிர்த் தொளிரும் பூணாய் போதுதி நிலைமை நோக்கி
மன்னுயிர்க் குறுதி செய்வான் மலாடி சுமந்து வாழ்தி
                  (வாலிவதைப்படலம் 136, 138, 141, 142, 153, 154)

வாலி இறந்தபின் தாரை புலம்பல்

விருத்தம்-11-திபதை-5

வாலியும் ஏக யார்க்கும் வரபிலா உலகில் இன்பம்
பாலியா முன்னர் நின்று பருதிசெய் செங்கை பற்றி
ஆவிலைப் பள்ளி யானும் அங்கத னோடும் போனான்
வேல்விழி தாரை கேட்டு வந்தவன் மெய்யில் வீழ்ந்தாள்

வரைசேர் தோளிடை நாளும் வைகுவேன்
கரைசோர் இடர்வேலை கண்டிலேன்