283 உரைசேர் ஆருயிரே என்உள்ளமே அரைசே யானிது காண அஞ்சினேன் நறிதம் நல்லமிழ் துண்ண நல்கலின் பிறியா இன்னுயிர்பெற்ற பெற்றிநாம் அறியாரோ நமனார்அது அன்றெனின் சிறியாரோ உபகாரம் சிந்தியார் அணங்கார் பாகனை ஆசைதோறும் உற்று உணங்காநாள் மலர்தூய் உள்ளன்பினால் இணங்காக் காலம் இரண்டொடு ஒன்றினும் வணங்காது இத்துணை வைகவல்லையோ நையா நின்றெனன் யானிருந்து இங்ஙன் மெய்வா னோர்திரு நாடுமேவினாய் ஐயா நீஎனது ஆவி என்பதும் பொய்யோ பொய் உரையாத புண்ணியா எந்தாய்நீ அமிழ்தீய யாமெலாம் உய்ந்தேம் என்று உபகாரம் உன்னுவார் நந்தா நாள்மலர்சிந்தி நண்பொடு வந்தாரோ எதிர் வானுளோர் எலாம் சொற்றேன் முந்துற அன்ன சொல்கொளாய் அற்றான் அன்னது செய்கலான் எனா உற்றாய் உம்பியை ஊழி காணும்நீ இற்றாய் யானுனை என்று காண்கெனோ நீரும் மேருவும் நீ நெருங்கினால் மாறோர் வாளியுன் மார்பை ஈர்வதோ தேறேன் யானிது தேவர் மாயமோ வேறோர் வாலி கொலாம் விளிந்துளான் அருமைந் தற்றம் அகற்றும் வில்லியார் ஒருமைந் தற்கும் அடாதது உன்னினார் தருமம் பற்றிய தக்கவர்க் கெலாம் கருமம் கட்டளை என்றல் கட்டதோ. (தாரை புலம்புறு படலம் 1, 4, 6, 7, 9, 11, 13, 14, 16) |