284 ஸ்ரீராமர் சுக்கிரீவனுக்கு ராஜநீதி கூறுதல் விருத்தம்-12 - தரு-7 பொன்மா மௌலி புனைந்து பொய்யிலான் தன்மானக் கழல் தாழும் வேலையில் நன்மார்பிற் றழுவுற்று நாயகன் சொன்னான் சொல்லின் முற்றிய எல்லையான் வாய்மைசால் அறிவின் வாய்த்த மந்திர மாந்தரோடும் தீமைதீர் ஒழுக்கின் வந்த திறத்தொழில் மறவரோடும் தூய்மைசால் புணர்ச்சி பேணித்துகளறு தொழிலையாகிச் சேய்மையோ டணிமையின்றித் தேவரின் தெரியநிற்றி புகையுடைத் தென்னின் உண்டு பொங்கனல் அங்கென்றுன்னும் மிகையுடைத்துலகம் நூலோர் வினையமும் வேண்டற் பாற்றே பகையுடைச் சிந்தை யார்க்கும் பயனுறு பண்பின் தீரா நகையுடை முகத்தையாகி இன்னுரை நல்குநாவால் தேவரும் வெஃகற்கொத்த செயிரறு செல்வம் அஃதுன் காவலுக்குரிய தென்றால் அன்னது கருதிக் காண்டி மேவரும் இனிய நண்பர் அயலவர் விரவார் என்றிம் மூவகை இயல்பினார்க்கும் முனைவர்க்கும் முயல்க முன்னே செய்வன செய்தல் யாண்டும் தீயன சிந்தியாமை வைவன வந்தபோதும் வசையில் இனிய கூறல் மெய்யன வழங்கல் யாவும் மேவினவெஃகல் இன்மை உய்வன வாகித்தம் மோடு உயர்வன உவந்து செய்வாய் சிறியர்என் றிகழ்ந்து நோவுசெய்வன செய்யல் மற்றுஇந் நெறியிகழ்த் தியானோர் தீமைஇழைத்தலால் உணர்ச்சி நீண்டு குறியதாம் மேனியாய கூனியால் குவவுத்தோளாய் வெறியன எய்திநொய்தின் வெந்துயர்க்கடலில் வீழ்ந்தேன் மங்கையர் பொருட்டால் எய்தும் மாந்தர்க்கும் மரணம் என்றால் சங்கையின்றுணர்தி வாலி செய்கையால் சாலும் இன்னும் அங்கவர் திறத்தினானே அல்லலும் பழியும் ஆதல் எங்களிற் காண்டியன்றே இதற்குவேறுவ மையுண்டோ |