286 விழையேன் விழைவானவை மேன்மையில் நின்று இழையேன் உணர்வு என்வயின் இன்மையினால் பிழையேன் உயிரோடு பிரிந்தன ரால் உழையே அவர்எவ் உழையார் உரையாய் பயில்பாடக மெல்லடி பஞ்சனையார் செயிர்ஏதும் இலாரொடு தீருதியோ அயிராது உடனே அகல்வாய் அலையோ உயிரே கெடுவாய் உறவு ஓர்கிலையோ அருவினை அரக்கர்என்ன அந்தரம் அதனில் யாரும் வெருவர முழங்குகின்ற மேகமே மின்னுகின்றாய் தருவல் என்றிரங்கினாயோ தாமரை மறந்த தையல் உருவினைக் காட்டிக் காட்டி ஒளிக்கின்றாய் ஒளிக்கின்றாயால் (கார்காலப் படலம் 14, 51-56, 60) ஸ்ரீராமரை லெட்சுமணர் தேற்றுதல் விருத்தம்-14-திபதை-8 சாலம் நீளிது காரும் மாரியும் வந்தது என்ற கவற்சியோ நீலமேனி அரக்கர் வீரம் நினைந்த ழுங்கிய நீர்மையோ வாலிசேனை மடந்தை வைகிடம் நாடவாரல் இலாமையோ சாலும் நூலுணர் கேள்விவீர தளர்ந்த தென்னை தவத்தினோய் மறைதுளங்கினும் மதிதுளங்கினும் வானும் ஆழ்கடல் வையமும் நிறைதுளங்கினும் நிலைதுளங்குறு நிலைமை நின்வயின் நிற்குமோ பிறைதுளங்குவ அனையபேரெயிறு உடையபேதையர் பெருமைநின் இறைதுளங்குறு புருவவெஞ்சிலை இடைதுளங்குற இசையுமோ மறையறிந்தவர் வரவுகண்டுமை வலியும் வஞ்சகர் வழியொடும் குறையவென்றிடர் களைவென் என்றனை குறைமுடிந்தது விதியினால் இறைவஅங்கவர் இறுதிகண்டினிது இசைபுனைந் திமையவர் கள்தாம் உறையும் உம்பரும் உதவிநின்றருள் உணர்வழிந்திடல் உறுதியோ காதுகொற்றம் நினக்கலாது பிறர்க்கெவ்வாறு கலக்குமோ வேதனைக் கிடமாதல் வீரதையன்று பேதைமையாம் அரோ போதுபிற்படல் உண்டிதோர்பொருள் அன்றுநின்று புணர்த்தியேல் யாதுனக் இயலாதது எந்தைவருந்தல் என்று இயம்பினான் |