287 பைந்தொடிக்கு இடர்களை பருவம் பையவே வந்தடுத்துளதினி வருத்தம் நீங்குவாய் அந்தணர்க் காம்அறம் அரக்கர்க் காகுமோ சுந்தரத் தனுவலாய் சொல்லு நீஎன்றான் (கார்காலப்படலம் 64, 65, 67, 68 101) சுக்கிரீவன் தாமசம் கண்டு ஸ்ரீராமர் கோபித்தல் விருத்தம்-15-தரு-9 அன்ன காலம் அகலும் அறவினில் முன்னை வீரன் இளவலை மொய்ம்பினோய் சொன்ன எல்லையின் ஊங்கினும் தூங்கினான் மன்னன் வந்திலன் என்செய்த வாரரோ பெறலருந் திருப்பெற்றுவிதப் பெருந் திறம் நினைந்திலன் சீர்மையின் தீர்ந்தனன் அறம் மறந்தனன் அன்புகிடக்கநம் மறம் அறிந்திலன் வாழ்வின் மயங்கினான் நன்றிகொன்று அருநட்பினை நார்அறுத்து ஒன்றும் மென்மை சிதைத்து உரைபொய்த்துளார்க் கொன்று நீக்குதல் குற்றத்தில் தங்குமோ சென்று மற்றவன் சிந்தையைத் தேர்குவாய் வெம்பு கண்டகர் விண்புக வேரறுத்து இம்பர் நல்லறம் செய்ய எடுத்தவில் கொம்பும் உண்டு அருங் கூற்றமும் உண்டுங்கள் அம்பும் உண்டு என்று சொல்லுநம் ஆணையே நஞ்சம் அன்னவரை நலிந்தால் அது வஞ்சம் அன்று மனுவழக் காதலால் அஞ்சில் அம்பதில் ஒன்றறி யாதவன் நெஞ்சில் நின்று நிலாவ நிறுத்துவாய் ஊரும் ஆளும்அசும் உம் சுற்றமும் நீரும் ஆளுதிரே எனின் நேர்ந்தநாள் வாரும் வாரலிரே எனின் வானரப் பேரும் மாளும் எனும் பொருள் பேசுவாய் |