288 இன்னும் நாடுதும் இங்கிவர்க்கும் வலி துன்னினாரை எனத் துணிந்தார் எனின் உன்னை வெல்ல உலகொரு மூன்றினும் நின்னலாற் பிறர் இன்மை நிகழ்த்துவாய் நீதியாதி நிகழ்த்தினை நின்றது வேதியாத போது வைகுண்டவன் சாதியா தவர் சொல் தரத் தக்கனை போதியாதி என்றான் புகழ்ப் பூணினான் (கிட்கிந்தைப்படலம் 1 8) சுக்கிரீவன் மதுபானத்தை நிந்தித்தல் கொச்சகம்-1 - தரு -10 நளன் இயற்றிய நாயகக் கோயிலுள் தளமலர்த் தகைப்பள்ளியில் தாழ்குழல் இளமுலைச்சியர் ஏந்தடி தைவர விளைதுயிற்கு விருந்து விரும்புவான் உறவுண்ட சிந்தையானும் உரைசெய்வான் ஒருவற்கின்னம் பெறலுண்டே அவரால் ஈண்டு யான் பெற்றபேருதவி உற்றது இறலுண்டே எண்ணின் தீர்வான் இருந்தபேரிடரை எல்லாம் நறவுண்டு மறந்தேன்காண நாணுவல் மைந்தஎன்றான் ஏயின நறவலால்மற்று ஏழைமைப் பாலதென்னோ தாயிவள் மனைவிஎன்னும் தெளிவின்றேல் தருமம் என்னாம் தீவினை ஐந்தின் ஒன்றாம் அன்றியும்திருக்கு நீங்கா மாயையின் மயங்குகின்றாம் மயக்கின்மேல் மயக்கும் வைத்தாம் அளித்தவர் அஞ்சும்நெஞ்சின் அடைத்தவர் அறிவின்மூழ்கிக் குளித்தவர் இன்பதுன்பம் குறைத்தவர் அன்றிவேரி ஒளித்தவர் உண்டுமீண்டு இவ்வுலகெலாம் உணரஓடிக் களித்தவர் எய்திநின்ற கதிஒன்று கண்டதுண்டோ வஞ்சமும் களவும் பொய்யும் மயக்கமும் மரபில்கொட்பும் தஞ்சம் என்றாரை நீக்கும் தன்மையும் களிப்பும்தாக்கும் கஞ்சமெல் லணங்குந்தீரும் கள்ளினால் அருந்தினாரை நஞ்சமும் கொல்வதல்லால் நரகினை நல்காதன்றே |