பக்கம் எண் :

29

சரணங்கள்

மறுவில்லாது இந்தசூரிய வங்கிசம்இது
     வளரும் வாங்கிசம்                        ஆச்சே-இது
மழைபேய்ந் தடிமறைந்தாற் போலஎன்
     மட்டிலே நின்று                          போச்சே
அறுபதி னாயிரம் வருஷமும்
     அரசுதான் இனி ஆரைக்கொண்டு            திருந்தும்
குறைவில்லாத அந்த சஞ்சீவி                    மருந்தும்
     கொடுக்கும்தெய்வமும் நீதானே கிடைத்       திருந்தும் (பிள்)

பெருக்கக் காண்பதே காண்பதல்லால்
     பெறுவதொன்றும்                         காணேன்-மிகு
பிச்சர்போல நெடுநாளும் உண்டஉண்ட
     எச்சிலை உண்ணல்                       ஆனேன்
விருத்தன் நான்இனித்தவ                       சில்லே
     வேணும் அல்லாமல் புவிஆள்வதும் சிறப்     பல்ல
இருத்தும் வாழையடி வாழையாய்ப்                புல்ல
     இவன்மகன் இவன்ஆம் என்று              சொல்ல (பிள்)

மோந்தால் முத்தியும் வரும் பரத்திலே
     முத்தியும்கூட                            வருமே-மேலே
காய்ந்தால் உடம்பெங்கும் குளிருமே
     தழுவஇன்பம்                            தருமே
வாய்ந்த பொன்னுலகளவும் போய்ச்சனி
     மண்டலமும் திருத்திக் கொண்டேன்          புவிதனி
ஏந்தினேன் இல்லையே ஒருபிள்                  ளைக்கனி
     என்னவீ டென்ன வாசல்                   எனக்கினி(பிள்)

-----

பெருமாள் சந்நிதியில் தேவர்கள் முறையீடு

விருத்தம்-4

மன்னவனாம் தசரதபூ பதியிவ் வாறு
     மக்களில்லாத் துன்பத்தை வதிஷ்ட னோடே
சொன்னவுடன் அந்தமுனி வனும்தியானித்தான்
     சுரர்முதலா னவர்கள்மக மேருமேலே
சின்னஅரக் கரைநடுங்கி வாழ்த்தும் போது