பக்கம் எண் :

290

வந்தடி வணங்கிநின்ற மாருதி வதனம் நோக்தி
அந்தமில் கேள்வி நீயும் அயர்த்தனை ஆகுமன்றே
முந்தின செய்கை என்றான் முனிவனும் முளைக்கும் அன்பான்
எந்தை கேட்டருள்க என்ன இயம்பினன் இயம்ப வல்லான்

மறந்திலன் கவியின் வேந்தன் வயப்படை வருவிப்பாரைத்
திறந்திறம் ஏவி அன்னார் சேர்வது பார்த்துத் தாழ்ந்தான்
அறந்துணை நுமக்குத்தான் தன் வாய்மையை அழிக்குமாயின்
பிறந்திலன் அன்றே ஒன்றோ நரகமும் பிழைப்பதன்றால்

மாருதி மாற்றம் கேட்ட வரைபுரை வயிறத் தோளான்
தீர்வினை சென்று நின்ற சீற்றத்தான் சிந்தை செய்தான்
ஆரியன் அருளின்தீர்ந்தான் அல்லன் வந்தடுத்தசெல்வம்
பேர்வரிதாகச் செய்த சிறுமையான் என்னும்பெற்றி

ஒன்றுமோ அரணம் அன்றுஇவ் வுலகமும் பதினால்உள்ள
வென்றிமா மலையும்ஏழேழ் வேலையும் எண்ணவேயாய்
நின்றதோர் அண்டத்துள்ளே எனினது நெடியதன்றோ
அன்றுநீர் சொன்னமாற்றம் தாழ்வித்தல் தருமம் அன்றால்

தாழ்வித்தீர் அல்லீர் பன்னாள் தருக்கிய அரக்கர்தம்மை
வாழ்வித்தீர் இமையோர்க் இன்னல் வருவித்தீர் மரபின்தீராக்
கேள்வித்தீ யாளர்துன்பம் கிளர்வித்தீர் பாவந்தன்னை
மூள்வித்தீர் முனியாதானை முனிவித்தீர் முடிவின் என்றான்

இயைந்தநாள் எல்லை நீசென்று எய்தலை செல்வம்எய்தி
வியந்தனை உதவிகொன்றாய் மெய்யிலை, என்னவீங்கி
உயர்ந்தது சீற்றம் மற்றுஅது உற்றது செய்யத் தீர்ந்து
நயந்தெரி அனுமன்வேண்ட நல்கினன் நம்மைஇன்னும்
   (கிட்கிந்தைப்படலம் 32, 35, 42, 47, 50, 53, 60, 64, 67, 72, 73, 80)

வானரப் படைத்தலைவர்களும் படைத்தொகையும்

விருத்தம்-17-திபதை-7

ஆனைஆயிரம் ஆயிரத் தெறுழ் வலியமைந்த
வானராதிபர் ஆயிரர் உடன்வர வகுத்த
கூனல்மாக் குரங்கு ஐயிரண் டாயிரகோடித்
தானையோடும் அச்சதவலி என்பவன் வந்தான்