பக்கம் எண் :

291

ஊன்றி மேருவை எடுக்குறும் மிடுக்கினிக்குரிய
தேன் தெரிந்துண்டு தெளிவுறு வானரச்சேனை
ஆன்றபத்து நூறாயிரகோடி யோடமையத்
தோன்றினான் வந்துஅசேடணன் எனும் பெயர்த்தோன்றல்

ஈறில் வேலையை இமைப்புறும் அளவினிற் கலக்கிச்
சேறுகாண்குறும் திறல்கெழு வானச்சேனை
ஆறெண்ணாயிரகோடி அதுஉடன்வர அமிழ்தம்
மாறிலா மொழி உருமையைப் பயந்தவன் வந்தான்

ஐம்பதாய நூறாயிர கோடி எண்ணமைந்த
மொய்ம்பு மால்வரை புரை நெடுவானம் மொய்ப்ப
இம்பர் ஞாலத்தும் வானத்தும் எழுதிய கீர்த்தி
நம்பனைத் தந்த கேசரி கடல்என நடந்தான்

மண்கொள் வாளெயிற்று ஏனத்தின் வலியின வயிரத்
திண்கொள் மால்வரை மயிர்ப் புறத்தன எனத் திரண்ட
கண்கொள் ஆயிரகோடியின் இரட்டியின் கணித்த
எண்கின் ஈட்டங் கொண்டு எறுழ் வலித்தூமிரன் இறுத்தான்

முனியுமாம் எனின் அருக்கனை முரணற முறுக்கும்
தனிமை தாங்கிய உலகையும் சலம்வரின் குமைக்கும்
இனைய மாக்குரங்கு ஈரிரண் டாயிர கோடி
அனிகம் முன்வர ஆன்பெயர்க் கண்ணன் வந்தடைந்தான்

தனிவரும் தடங்கிரி எனப் பெரியவன் சலத்தால்
நினையும் நெஞ்சிற உரும் என உருக்குறு நிலையன்
பனசன் என்பவன் பன்னிரண்டாயிர கோடிப்
புனித வெஞ்சின வானரப் படைகொடு புகுந்தான்

இடியும் மாக்கடல் முழக்கமும் வெருக்கொள இசைக்கும்
முடிவில் பேருறுக்குடையன விசையன, முரண
கொடிய கூற்றையும் ஒப்பன பதிற்றைந்து கோடி
நெடிய வானரப் படை கொண்டுபுகுந்தனன் நீலன்

மாகரத்தன உரத்தன வலியன நிலைய
வேகரத்த வெங்கண் உமிழ் வெயிலன மலையின்