பக்கம் எண் :

292

ஆகரத்தினும் பெரியன ஆறைந்து கோடி
சாகரத் தொடும் தரீமுகன் என்பவன் சார்ந்தான்

இளைத்து வேறொரு மாநிலம் வேண்டுமென்றி ரங்க
முளைத்த முப்பதினாயிர கோடியின் முற்றும்
விளைத்த வெஞ்சினத்து அரியினம் வெருவுற விரிந்த
அளக்க ரோடும் அக்கவலன் என்பவனும் வந்தடைந்தான்

ஆயிரத் தறுநூறு கோடியின் கடை அமைந்த
பாயிரப் பெரும்படை கொண்டு பாவையின் திரையின்
தாயுருத் துடனே வரத் தடநெடு வரையை
ஏற் உருப்புயச் சாம்பன் என்பனும் வந்திறுத்தான்

வகுத்த தாமரை மலரயன் நிசிசரர் வாழ்நாள்
உருத்த தீவினை பொருவதோர் பெருவலியுடையான்
பருத்த பத்து நூறாயிரப் பத்தினின் இரட்டி
தொகுத்த கோடி வெம்படை கொண்டு துன்முகன் தொடர்ந்தான்

இயைந்த பத்து நூறாயிரப் பத்தெனும் கோடி
உயர்ந்த வெஞ்சின வானரப் படையொடும் ஒருங்கே
சயந்தனக் கொரு வடிவெனத் திறல் கொடுதழைத்த
மயிந்தன் மல்கசகோ முகன் தன்னொடும் வந்தான்

கோடிகோடி நூறாயிரம் எண்எனக் குவிந்த
நீடுவெஞ்சினத் தரியினம் இருபுடை நெருங்க
மூடும் உம்பரும் இம்பரும் பூமியில் மூழ்கத்
தோடலர்ந்த தார்க்கிரிபுரை துமிந்தனும் தொடர்ந்தான்

கறங்குபோல் வனகாற்றினும் கூற்றினும் கடிய
பிறங்கு தெண்டிரைக்கடல் புடை பெயர்ந்தெனப் பெயர்வ
மறங்கொள் வானம் ஒன்பது கோடி எண்வகுத்த
திறங்கொள் வெஞ்சினப் படைகொடு குமுதனும் சேர்ந்தான்

ஏழினின் ஏழுநூறாயிர கோடி என்றிசைந்த
பாழி நன்னெடுந் தோள்கிளர் படைகொண்டு பரவை
ஊழி பேரினும் உலைவில உலகினில் உயர்ந்த
பூழி விண்புகப் பதுமுகன் என்பவன் புகுந்தான்

ஏழும் ஏழும் என்னுரைக்கின்ற உலகங்கள் எவையும்
தாழும் காலத்தும் தாழ்விலாத் தடவரைக் குலங்கள்