293 சூழும் தோற்றத்த வலிகொள் தொள்ளாயிர கோடிப் பாழி வெம்புயந்து அரியொடும் இடபனும் படர்ந்தான்      தீர்க்கபரதனும் வினதனும் சரபனும் திரைக்கும் மால்கருங்கடற்கு உயர்ந்துள மைம்முகத்து அனிகம் ஆர்க்கும் எண்ணருங்கோடி கொண்டண்டமும் புறமும் போர்க்கும் பூமியில் மறைதர முறையினின் புகுந்தார்      கையஞ்சாயுதம் உடையஅக் கடவுளைக்கண்டு மெய்யஞ் சாதவன் மாதிரம் சிறிதென விரிந்த வையம் சாய்தரத் திரிதரும் வானரச்சேனை ஐயஞ்சாயிர கோடிகொண்டு அனுமன்வந் தடைந்தான்      நொய்தின் கூடியசேனை நூறாயிரகோடி எய்ததேவரும் என்கொலோ முடிவுஎன்பது எண்ண மையல் சிந்தையால் அந்தகன்மறுக்குற்று மயங்க தெய்தச்சன் மெய்த்திருநெடுங் காதலன் சேர்ந்தான்      கும்பனும்குலச் சங்கனும் முதலினர் குரங்கின் தம்பெரும்படைத் தலைவர்கள் தரவந்ததானை இம்பர்நிறைவர்க் கெண்ணரிது இராகவன் ஆவத்து அம்பெனும் துணைக்குரிய மாறுரைப்பு அரிதுஅறவே      இன்னசேனையை முடிவுற இருந்திவன் நோக்கிப் பின்னை காரியம் புரிதுமேல் நாள்பல பெயரும் உன்னி செய்கைமேல் ஒருப்படல் உறுவதே உறுதி என்ன, வீரனைக்கை தொழுது இளையவன் செப்பும்      யாவது எவ்வுலகத்தினின் இங்கிவர்க் கியற்றல் ஆவது ஆகுவது அரியதொன்றுள தெனல்ஆமே? தேவ, தேவியைத் தேடுவது என்பதுசிறிதால் பாவம் தோற்றது தருமமேவென்றது இப்படையால்                            (தானைகான்படலம் 2, 22, 37, 38)    |