294 சாம்புவவந்தன் அனுமாரைத் துதித்தல் விருத்தம்-18-திபதை-8 அவனும், அண்ணல் அனுமனை ஐயநீ புவனம் மூன்றும்நீன் தாதையின் புக்குழல் தவன வேகத்தை ஓர்கிலை தாழ்ந்தனை கவனமாக் குரங்கின் செயல் காண்டியோ தென்திசைக்கண் இராவணன் சேண்நகர் என்றிசைக் கின்றதென் அறிவு இன்னணம் வன்திசைக்கு இனி மாருதி நீயலால் வென்றிசைக் குரியார் பிறர் வேண்டுமோ (நாடவிட்டபடலம் 5, 7) மேலை விரிஞ்சன் வீயினும் வீயா மிகைநாளீர் நூலை நயந்து நுண்ணி துணர்ந்தீர் நுவல் தக்கீர் காலனும் அஞ்சும் காய்சின மொய்ம்பீர் கடன்நின்றீர் ஆலம் நுகர்ந்தான் என்ன வயப்போர் அடர்சிற்பீர் வெப்புறு செந்தீநீர் வளியாலும் விளியாதீர் செப்புறு தெய்வப் பல்படையாலும் சிதையாதீர் ஒப்புறின் ஒப்பார் நின்அலதில்வீர் ஒருகாலே குப்புறின் அண்டத்தப்புற மேயும் குதிகொள்வீர் நல்லவும் ஒன்றோ தீயவும் நாடி நவைதீரச் சொல்லவும் வல்லீர் காரியம் நீரே துணிவுற்றீர் வெல்லவும் வல்லீர் மீளவும் வல்லீர் மிடல் உண்டே கொல்லவும் வல்லீர் தோள்வலி என்றும் குறையாதீர் மேருகிரிக்கும் மீதுறநிற்கும் பெருமெய்யீர் மாரிதுளிக்கும் தாரையிடுக்கும் வரவல்லீர் பாரை எடுக்கும் நோன்மை வலத்தீர் பழியற்றீர் சூரியனைச் செற்றொண்கையகத்தும் தொடவல்லீர் அறிந்திறத்தா றெண்ணி அறத்து ஆறு அழியாமை மறிந்துருளப் போர் வாலியை வெல்லும் மதிவல்லீர் பொறிந்திமை யோர்கோன் வச்சிரபாணம் புகமூழ்க எறிந்துழி மற்றோர் புன்மயிரேனும் இழவாதீர் |