பக்கம் எண் :

295

போர்முன் எழுந்தால் மூவுலகேனும் பொருள் ஆகா
ஓர்வில் வலங்கொண்டு ஒல்கலில் வீரத்துயர் தோளீர்
பாருலகெங்கும் பேரிருள் சீக்கும் பகலோன்முன்
தேர்முன் நடந்தே ஆரியநூலும் தெரிவுற்றீர்

நீதியில் நின்றீர் வாய்மையமைந்தீர் நினைவாலும்
மாதர்நலம் பேணாது வளர்ந்தீர் மறைஎல்லாம்
ஓதிஉணர்ந்தீர் ஊழிநடந்தீர் உலகீனும்
ஆதியயன்தா னேஎனயாரும் அறைகின்றார்

அண்ணல் அம்மைந்தர்க் கன்புசிறந்தீர் அதனானே
கண்ணி உணர்ந்தீர் கருமம்நுமக்கே கடன்என்னத்
திண்ணிதமைந்தீர் செய்து முடிப்பீர் சிதைவின்றால்
புண்ணியம் ஒன்றே என்றும் நிலைக்கும் பொருள் கொண்டீர்

அடங்கவும் வல்லீர் காலமதன்றேல், அமர்வந்தால்
மடங்கல் முனிந்தா லன்னவலத்தீர் மதிநாடித்
தொடங்கிய தொன்றோ முற்றும் முடிக்கும் தொழிலல்லால்
இடங்கெட வெவ்வாய் ஊறுகிடைத்தால் இடையாதீர்

ஏகுமின்ஏகி எம்முயிர் நல்கி இசைகொள்வீர்
ஓகை கொணர்ந்தும் மன்னையும் இன்னல் குறைவில்லாச்
சாகரம் முற்றும் தாவிடும் நீர் இக்கடல்தாவும்
வேகம் அமைந்தீர் என்று விரிஞ்சன் மகன்விட்டான்
                                (மயேந்திரப்படலம் 9-17, 19)

அனுமார் கடல்தாண்ட இசைதல்

விருத்தம்-19

நீயிரே நினைவின் முன்னம் நெடுந்திரைப் பரவை ஏழும்
தாய்உலகனைத்தும் வென்று தையலைத்தருதற் கொத்தீர்
போய்இதுபுரிதி என்று புலமைதீர் புன்மை காண்டதற்கு
ஏயினீர் என்னின் என்னின் பிறந்தவர் யாவர் இன்னும்