பக்கம் எண் :

297

ஸ்ரீ ராமஜெயம்

ஐந்தாவது

சுந்தர காண்டம்

அனுமர் கடல் தாண்டப் பாய்தல்

விருத்தம்-1

பாய்ந்திடு சிறுபிள்ளை ஆம்பொழு தொருதினம் மாங்கனி ஆமெனவே
காய்ந்திடு கதிரெதிர் பாய்ந்தவன் நெடுகிய கடல்களும் நிலைபிசகித்
தோய்ந்திட வடவரை சாய்ந்திட விசுவசொரூபம் எடுத்தனுமான்
நாம்துதி பேசும்ம யேந்திரம்ஏறியண் ணாந்தெதிர் பாய்ந்தனனே.

தரு-1

நாதநாமக்கிரியை ராகம்                         ஆதிதாளம்

பல்லவி

பாய்ந்தானே அனுமான் - மயேந்திரம் ஏறிப்
பாய்ந்தானே அனுமான்.                        (பாய்ந்)

அநுபல்லவி

பாய்ந்தொரு மூவுல    கேந்தியராவணன்
மாய்ந்திடமேவுகு      லாந்தகன் எனவே              (பாய்)

சரணங்கள்

1. கேசவ ராகவ       பூசித னேஎனும்
  வாசக மானது      நேசம் விடாமல்
  மோச நிசாசரர்     நாசம் தாய்விட
  வீசியவால் எம     பாசம தாகப்              (பாய்)

2. வட்ட நெடுங்கடல்  முட்ட உரங்கிழி
  பட்டு மறைந்திடு    திட்டுகள் தெரிய
  நெட்டை நெடுங்கிரி எட்டுமறும் பொடி
  பட்டுதி ரும்பிடி     நட்டணை ஆகப்          (பாய்)