298 3. எடுத்தொரு ராகவன் கொடுத்தகை மோதிரம் இடுக்கிய காதிலே மடற்குளே யடக்கி மிடுக்குள ராட்சதர் நடுத்தலை மேல் விழும் இடிக்கிணை யாகவே திடுக்கென ஓடிப் (பாய்) 4. அண்டர்கள் முனிவர்கள் கண்டதிசயமொடு மண்டிய மருமலர் கொண்டனர் பொழிய வீண்டல ரவி சசி மண்டலம் இருசிறு குண்டலம் எனமுக மண்டலம் அசைய (பாய்) 5. சுமந்திடு தாயுரை சுமந்தவன் ஈரடி சுமந்து விசுவரூபம் சமைந்ததி னாலே அமிழ்ந்திய கடல்படு திமிங்கில மொடுதிமி திமிங்கிலம் விவையினில் மிதந்திட மேலே (பாய்) 6. அந்தமலையில் உள தந்தி கரடிபுலி நொந்து திசைதிசைபி ரிந்த அவை வெருள முந்து கொடி முடிபி ளந்து பளபளென உந்து இணையடிகள்உ தைந்து கிளம்பி (பாய்) ------ இலங்கணி வதை விருத்தம்-2 வாரவிஸ்வ ரூபமுடன் பாய்ந்தான் வார்த்தை மைநாகற் குரைத்தான்மத் தியில்அங்கார தாரைஎனும் அரக்கிகுடல் பிடுங்கிக் கொண்டான் தலங்குலுங்க இலங்கைமுன்னே குதித்தான் அங்கே காரமுள்ள அரக்கிஇலங் கணிதான் ஆல காலம்என வடவாசற் காவற் காரி ஆரடாஎன் றதட்டி வந்தாள் அனுமான் கையால் அறை கொண்டாள் கொண்டளவே தரைகண்டாளே |