299 தரு-2 சங்கராபரண ராகம் ஆதிதாளம் பல்லவி இலங்கணி மடிந்தாளே - அனுமன் கையால் பலங்கெட முடிந்தாளே (இலங்) அநுபல்லவி சலங்கொள் ஈரிரண்டு தலையும் விரித்துக் கொண்டு அலங்கோல மாய்ப்புரண்டு அலறி உளறிப் பண்டு (இலங்) சரணங்கள் 1. பதைப்பி னாலே எட்டுக் கையும் பறக்கவிட்டுப் பாரமலைபோல் எழுந் தார வாரமிட்டு அதட்டி அதட்டி ஆயுத மெல்லாம் தொட்டுத் தொட்டு அத்தனையும் பொடியா அனுமான்கை அடிபட்டு (இலங்) 2. பிடிபாடமல் இந்த ஊர்காத்திருப்பேன் ஆதி பிரம்மா உரைத்தபடி ஆச்சுதே என் சேதி அடிபட்டுக் கொண்டேன் போகிறேன் உனக்கினிமீதி ஆட்டுக் குட்டிகள் இந்த அரக்கர் படை என்றோதி (இலங்) 3. ஆரும் எதிர்ந்திடாத என்னை நொடிக்குட்சீறி அடித்தாயே உன்னைஎதிர்ப் பாரில்லைமனந் தேறி மாருதியே நமஸ் காரம் என்று கூறி வணங்கி வடக்குக் கோட்டை வாசல் காவற் காரி (இலங்) ----- அனுமார் இலங்கையில் சீதையைத் தேடுதல் விருத்தம்-3 மோதுமிலங்க கணியைரா வணன்ப டைக்கு முதற்பலி யாகக்கொடுத்து முகுர்த்தங் கொண்டு மாதவனா கியராமன் பாதந் தன்னை மனங்கொண்டு ராட்சதர்மேல் சினங்கொண் டப்பால் |