பக்கம் எண் :

301

கொலைசெயும் அரக்கர் கிடைகளும் நடைகளும்
     குங்கும நீராற்றங்                 கரைகளும்
நலமுள சந்தியும் பந்தியும் நாற்பத்து
     நாலுலட்சம் வீதி                  நிரைகளும்
     அலைகடலாகிய அகழியும்          கேணியும்
          ஆயிரம் வெள்ள அரக்கர்தங்  காணியும்
     தலைஎடுப்பாக உயர்ந்த அட்       டாணியும்
          சத்திரச் சாலையும் ஒத்ததிட்   டாணியும்
தடத்திலும் முனிவர்கள் மடத்திலும் பெண்கள் செய்
நடத்திலும் புகைபோகா இடத்திலும் போய்ப் பாய்ந்து (தேடி)

3. மைந்நாக மலைபோலே தூங்கும் கும்பகர்ணன்
     மனையிலும் சூழ்ந்த கொட்       டகையிலும்
  பொன்னா ரணிமார்பன் இந்திரச் சித்திருக்கின்ற
     புதுமனையிலும் சூ              ளிகையிலும்
  மெய்நாளும் பேசும் விபீஷணன் வீட்டிலும்
     வீட்டில் ஓமகுண்ட              வகையிலும்
  பின்அதி காயன்அட் சயன்தேவாந்தகன்
     பேரான மாடமா                ளிகையிலும்
     வண்ணக் கிளிகள் வளர்         பஞ்சரத்திலும்
          வானவர்தானவர் பணி      நகரத்திலும்
     அன்னை மண்டோதரி வாழும்    தரத்திலும்
          அவளும் அரக்கனும் சேர் அந்தப் புரத்திலும்
அணில் எனவே தொத்தி    அணியணியாய் ஒற்றி
அணைகளெல்லாம் தத்தி    அணு அணுவாய்ச் சுற்றித் (தேடி)

------

அனுமார் இராவணனைக் கண்டு கோபித்தல்

விருத்தம்-4

    இலகும்அரக் கனையும் மண்டோதரியும் கண்டே
          இவளேசா னகிஆவாள் எனஉள் ஏங்கி
    நிலைகலங்கி முகத்தொழுகு கோட்டு வாயும்
          நெடுமூச்சும் கண்டிவளோர் அரக்கி என்றே