302 மலர்விழியில் அறைந்துகா தினிலே கையை வைத்துடனே அரிகரீ என்று சொல்லிப் பலபலயோ சனையனுமான் எண்ணி எண்ணிப் பாவிப்பான் ராவணன்மேல் கோவிப்பானே தரு-4 அடாணா ராகம் ஆதிதாளம் பல்லவி இந்த ராவணனைக் கண்டு சும்மா போனால் என்ன அனுமான் நானே (இந்த) அநுபல்லவி அந்தராமத் துரோகி இவன்பலம் குறியேனோ ஆத்திநார் கிழித்தாற்போல் கிழிக்க நான் அறியேனோ சரணங்கள் 1. புவியடங்கலும் கிட்டவே-மண்டோதரி புலம்பும் ஓசை முட்டவே-கண்டவர்கள் எவரும் கெக்கலி கொட்டவே-வாலினாலே இழுத்துப் பிடித்துப் பொட்டவே-கட்டி இறுக்கிறேன் தோள்ஒடிய முறுக்கிறேன் தலைபத்தும் அறுக்கிறேன் தேங்காய்போல நொறுக்கிறேன் அல்லாமல் (இந்த) 2. பன்னக சாலை விட்டுத்-திருட்டுவேஷம் பண்ணி இலங்கை மட்டும்-கொண்டு வந்தான் அன்னையைச் சிறையில் இட்டு-வைத்த பாவி அரக்கன்என் எதிர்ப் பட்டும்-கன்னத்தில் அடிக்காமலும் கைகளை ஒடிக் காமலும் நெஞ்சிலே இடிக்காமலும் என்கோபம் முடிக்காமலும் போவேனோ (இந்த) 3. காலனுக்குப காரம்-ஆகுமேதேவர் களுக்கும் உண்டதி காரம்-விறுதாவாய் மேலினிஏன் வி சாரம்-சாமி சொந்த வேலைக் கிதுவே நேரம்-இப்போது |