303 வெல்லவேணும் இவனைக் கொல்லவேணும் என்பேரைச் சொல்லவேணும் பிறகு செல்லவேணும் அல்லாமல் (இந்த) ----- அனுமர் சீதையைக் காணாததால் இரங்குதல் விருத்தம்-5 மாதரசைத் தேடவென்று தூதனாக வந்த இடத்திந்தரா வணனைக் கொன்றால் பேதகமாம் இவனுயிரை வாங்க வீரன் பிரசண்டகோ தண்டமே தக்கதென்று போதுளதாம ரையிலைமேல் தண்ணீர்ப் போலும் புதையல்இழந் தவர்போல அனுமான் ஏங்கிச் சீதைதனைக் காணாமல் ராம மந்திரம் செபிக்கின்றான் வெளியில் வந்து தவிக்கின்றானே. திபதை-1 காம்போதி ராகம் ஆதிதாளம் கண்ணிகள் 1. இந்த இலங்கைநகர் எழுநூறு யோசனை எங்கெங்கும் போய்த்தேடி னேனே கந்தமலர்க்குழ னாள் என்தாய் சீதையைக் கண்ணிற் காணாமல் வாடி னேனே 2. பாராத இடமில்லை தாயாம் சீதையைப் பாதகன் செய்ததென்ன சூதோ தீராத நெஞ்சுக்குத் தெய்வமே துணைநான் செய்யும் வகைதானினி ஏதோ 3. அற்பராகும் இந்த வஞ்சனை அரக்கர்செய் அதர்மம் தானே மெய் தானோ எப்படி யாகிலும் தர்மமே தலைகாக்கும் என்பதெல்லாம் பொய் தானோ 4. நாடிச் சேதிகொண்டு வருவேன் என்றுசாமி ராமன் சொல்லுவான் என்றல் போச்சே |