பக்கம் எண் :

304

  தேடி வருவேன்என்று விருது கூறிவந்து
     செடியிலே நுழைந்தாற்போல்           ஆச்சே

5. மேட்டுக்குப்பையைப் போலே இலங்கைப் பட்டணம் எங்கும்
     வேருடனே கெல்லு                  வேனோ
  காட்டும் என் தாயை என்று ராட்சதப் பயல்களைக்
     கையாற் பிசைந்து கொல்லு            வேனோ

6. விலங்காமல் தவணை சொல்லிவந்த நாளெல்லாம்
     வீணே திரிந்து குறைத்                தேனே
  சலந்தனிலோ இந்த நிலந்தனிலோ நாக
     தலந்தனிலோ மறைத்                 தானே

7. உலகில் எந்தக் காரியமும் ஒருதரம் ராமா என்றால்
     உடன்கூடும் என்றுமல்லோ            வேதமே
  பலதரம் ராமா என்றும் எனக்கிந்தக் காரியம்
     பலியாத தென்னவி                  னோதமே

8. ஆனைதன் பலந்தன்னை அறியாதுபோலே தேவி
     ஆராரைக் கைகுவிக்கி                றாளோ
  பூனைமுன் கிளிபோலே எவர்கள்முன்னே என்தாய்
     புலம்பிப் பரிதவிக்கி                  றாளோ

9. வாதைப் பட்டரக்கர் முட்டைப்போலே நசுங்க
     மலைமலையாப் பிடுங்கிச்              சாடவோ
  சீதையைக் காட்டும் மட்டும் கிடஎன்று ராவணனை
     வாலாலே மாட்டியிழுப்               பாடவோ

------

அனுமார் சீதையைக் காணுதல்

விருத்தம்-6

    கொண்டலெனும் அனுமான்இப் படிகலங்கிக்
          கோலிழந்த குருடனென நின்றான் முன்னே
    மண்டியதோர் அசோகவனம் கண்டான் தாவி
          வந்ததிலோர் மரத்திருந்தான் அந்த வேளை
    அண்டரிய ஒருமுலையர் பத்துக்கையர்
          அரிமுகத்தர் பரிமுகத்தர் அனேகம் பேர்கள்