பக்கம் எண் :

305

கண்டகவல் லரக்கியர்கள் நடுவிலே ஓர்
     கருக்கண்டான் சீதைதிரு உருக் கண்டானே.

தரு-5

கலியாணி ராகம்                               ஆதிதாளம்

பல்லவி

     சீதையைக் கண்டானே-அனுமான்
              செடிமேல் நின்று
     சேவையைக் கொண்டானே-அனுமான்        (சீதை)

அநுபல்லவி

     ஆதவன் காணாத          இலங்கை மடுவிலே
     அரக்கியர் என்கின்ற        புலிக்கூட்டம் நடுவிலே (சீதை)

சரணங்கள்

1. தாயிவள் தாயிவள்                    நிலைவரமே-சாமி
     தனக்கும் இவள் மெத்தம            னோகரமே
  தீயையும் சுடுமிவள்                    சரித்திரமே தெய்வ
     தெய்வங்களுக்குமிவள்               மீசரமே
  சாயும் சந்திர ரேிய வம்மிசமும்           பெருக்கும்
     தனியாம் தருமமும் இனிமேலல்லோ    செருக்கும்
  ஏய அடையாளங் கண்டேன் அஞ்சேனொரு வருக்கும்
     என்று செல்லரித்தாலும் இருந்திடத்தே   இருக்கும் (சீதை)

2. தேவிக்குத் தாயென்பர்    அல்லோ       பூமி-அவன்
     திடத்தையும் வென்றாள் இந்த அபி     ராமி
  பாவி அரக்கர்க்              கிவள்கால  நேமி-இதைப்
     பார்க்கப் பெற்றான்    இலையேஎன்    சாமி
  பூவிளந் துகில்மேல்       அழுதழுதழுது   மொய்த்த
     புனல்தானே முலைத்தட     அனலாலே வற்ற
  சேவலைத் தேடுமிளம்         பெடைபோலே மெத்தத்
     திகைத்துத் திகைத்து வடமுகத்திலே முகம் வைத்த (சீதை)

3. இருஷிகட்கு மகிமை      என்ன         கண்டு-இவள்
     ராமாமுர்தசீ          வனத்தைக்     கொண்டு
  சருகுபோலே வற்றிப்     பொசிப்பை      விண்டு-அம்மை
     தான்செய்யும் தவமே   மகிமை        உண்டு