306 ஒரு சூரியன் முன்னே மதிபோலிந்த வல்லி உவமைகொண்டாள் அரக்கர் ஒழிய எவர்க்கும் நல்லி திருவே இவள்அந்த அரியகோதண்ட வில்லி செயமினி சாமிகாரியம் பயமில்லை என்று சொல்லி (சீதை) ----- சீதாதேவி திரிசடையோடு முறையிடல் விருத்தம்-7 அனுமனிந்தப் படிசீதை தனைமரத்தி லிருந்துகண்டான் அப்பால் அந்த வனிதையும் தாமரையிலைமேல் தண்ணீராய்த் திரிசடைதன் வதனம் பார்த்தாள் கனமுளஎன் சிறைநீக்கிச் சாமிமுகந் தனைக்காணக் கடவேனோ நான் உனதுமதி ஏதென்றே உருகுவாள் அமைசொல்லி உருகுவாளே திபதை-2 நீலாம்பரிராகம் ஆதிதாளம் கண்ணிகள் 1. ஐயோ நானொரு பெண்பிறந்த கதையை ஆருடனே சொல்லுவேன் திரிசடையே தெய்வமும் நீபெற்ற தாயும் நீஅல்லாமல் வேறு திக்குண்டோ கேளாயம்மா திரிசடையே 2. மங்கைமார் கொண்ட கணவனைப் பிரிந்தால் மனையிலும் இருப்பாரோ திரிசடையே எங்கெங்கும் வகையாச்சே கேட்பவர் என்னென்று பழிப்பாரோ திரிசடையே 3. கடலிலே இந்த இலங்கை இருக்குதென்று காகுத்தர் அறியாரோ திரிசடையே தொடரும் என்சேதி அவர்க்குச் சடாயுராசர் சொல்லாமல் இறந்தாரோ திரிசடையே |