307 4. துணையாக வேவைத்த கொழுந்தனை அவர் பின்னே தூரப் போகச் சொன்னேனே திரிசடையே கணவனார் மெத்த நீலிஇவள் என்றென்னைக் கைநழுவ விட்டாரோ திரிசடையே 5. சூத்திரம் செய்து ராட்சதன் இவன் என்னைக் கொண்டுவந் தானல்லோ திரிசடையே இத்தனை நாளவன்தின்று விடுவானென்றே எண்ணித் திரும்பினாரோ திரிசடையே 6. அரசில்லா அந்த நாடு காடாச்சுதென்று ஆலோசனை செய்து திரிசடையே பரதனும் தாய்மாரும் வந்து அழைக்கஅவர் பதியிலே போய்விட்டாரோ திரிசடையே 7. சனகராசன்வில் ஒடித்தவன் முன்எறிந்த தடந்தோளை என்று காண்பேன் திரிசடையே கனமுடனேப ரசுராமன் வில்லைப் பறித்த கைகளை என்று காண்பேன் திரிசடையே 8. வைத்த போதிலும் கைகை பின்னே அந்தஅரசை வாங்கிய போதிலும் திரிசடையே சித்திரச் செந்தாமரை மலரைப் போலே மலர்ந்த திருமுகம் என்று காண்பேன் திரிசடையே 9. கொழுந்தி நான் என்றும் குகனுக்குத்தாம் தோழரென்று கூறினதும் பொய்போமோ திரிசடையே எழுந்து செல்லும் விராதன் துதியை மனமகிழ்ந்த இரக்கமும் போய்விட்டதோ திரிசடையே 10. கரதூஷணர் பதினாலாயிரந்தேரும் கணத்திற் பொடி செய்தாரே திரிசடையே சரவேகமும் கையும் மெய்யுமென்னிருவிழி தம்மில் நிற்கின்ற தையோ திரிசடையே 11. வல்லபேருக்குப் புல்லும் ஆயுதமென்ற வழக்கச் சொல்லைப் போலத் திரிசடையே புல்லினாற் காக்கைக் கண்டோற் கண்கொடுத்த புண்ணியரைக் காண்பதென்றோ திரிசடையே |