31 தேவர்களுக்குப் பெருமாள் அருளிப்பாடு விருத்தம் - 5 இசையும்வா னவர்கள் கூடி இப்படிச் சொல்ல மாயோன் அசையும்வா ளரக்கர்தம்மை அகற்றுவோம் அஞ்ச வேண்டாம் தசரதன் மதலை யாகித் தரணியில் வளருவோம் நீங்கள் திசைதொறும் கவிக ளாகிச் சேருமென் றுரைசெய் வானே தரு-2 மோகனராகம் அடதாளச்சாப்புத்தாளம் பல்லவி அவதாரஞ்செய் திடுவீரே அரக்கர் பயத்தை விடுவீரே அநுபல்லவி கனக வாலியும் சுக்கி ரீவனும் ஆகிக் கண்ணா யிரவ னும்கதி ரோனும் போகி (அவ) சரணங்கள் 1. அதிகமான ருத்திரன் அங்க சன்எனும் சீலன் அக்கினி யேசேனைக் கதிபனான நீலன் சதுர்முகப் பிரம்மாவே சாம்பவன்எனும் காலன் தரும்உ பேந்திரன் வாலிதனக்குப் பாலன்-ஆக (அவ) 2. சங்கமும் சக்கிரமும் சேஷனும்பரி வாகத் தம்பியர் ஆய்வரத்தானே நரம்பூ லோகத் துங்கனான தசரத ராசன்குறை போகச் சுருக்கா வருவோம் எவரும்அதின்முன் பாகப்-போய்(அவ) 3. வானர வடிவாலும் மானிடவடி வாலும் தானல்லா தரக்கன் சாகானேஒரு காலும் ஆன படியினாலே அனைவரும்புலி போலும் கானிலும்இரும் காட்சிதருவோம் மென் மேலும்-வந்து(அவ) ------ பெருமாள் திருஅவதாரம் விருத்தம்-6 இவ்வகையா மாயவன்முன் நடந்த தென்றே எண்ணிமுனி கலைக்கோட்டு முனிவ னாலே |