பக்கம் எண் :

32

அவ்வகையாம் புத்திரகா மேஷ்டி தன்னை
     அயோத்தியர சனைக்கொண்டுசெய் வித்த போதில்
பைவளரும் பாம்பணைமேல் பள்ளி கொள்ளும்
     பரமனே தசரதன்செய் பாக்கியத் தாலே
மெய்வகை சேர்உலகெல்லாம் மனுவிக்கியான
     விதிசெய்வான் அவதாரம் அதுசெய் வானே

தரு-5

கௌலிபந்து ராகம்                        ஆதிதாளம்

பல்லவி

     பரப்பிரம்ம சொரூபமே - ஸ்ரீராமனாகப்
     பாரில்வந் ததுபாரும்                      (பரப்)

அநுபல்லவி

     வரத்தினால் அரக்கரை வானத்தில் ஏற்றவும்
     வானத்தில் தேவர்கள் மலர்மாரி தூற்றவும்         (பரப்)

சரணங்கள்

1.    பத்தி முனிவர் கலைக்கோட்டுமாமுனி
          பண்ணிய யாகபலன்             தேற
     சத்திய தசரதற் கறுபதினாயிரம்
          சம்வச்ர பலன்நிறை             வேற
     சித்திரை மாசம் நவமிகடகம்
          செழும்புனர் பூசம்தேன்          ஊற
     ஒத்த கிரகங்கள் நால்வரும் பதினொன்றில்
          உச்சத்தில் ஐவரும்              ஏற-ஆதி (பரப்)

2.    சீராரும் லட்சுமணன் சத்துருக்கன்சுமித்
          திரைவயிற்றில் நின்று            பேர
     பாரார் புகழ்கை கேசிவயிற்றில் நின்று
          பரதன் வந்துபுவி               சேர
     ஆராலும் கொள்ளாத ஆனந்தம் மேற்கொண்டு
          அம்புவியோர் இடர்             தீர
     காராரும் குழல்வல்லி இருவர்க்கும் மேலான
          கௌசலைக் கண்களி            கூர-ஆதி (பரப்)