33 3. தேவர் முனிவர்பகை தீர்ந்தோம் என்று சென்னியில்பூந் துழாய் முடிக்க பூவுல கத்துள்வேதியர்எல் லோரும் புகழும்வே தாகமம் படிக்க பாவி இலங்கையின்மேல் சூரியன் தேரிலுள்ள பச்சைப்பரி ஏழும் நடிக்க ராவண னாதி இருக்கின்ற ராட்சதர் யாவர்க்கும் இடக் கண்கள் துடிக்க-ஆதி (பரப்) --------- கௌசிகர் இராமனைக் குறித்துக் கேட்குதல் விருத்தம் -7 மைந்தர்இவ் வாறு வந்து வதிஷ்டனால் பேரும்பெற்றார் அந்தநாள் விசுவா மித்திரன் அணிதச ரதன்முன் வந்தான் இந்தநாள் எனது வேள்வி இராமனால் முடியவேணும் தந்திட இதுநல் வேளை தாவென்றான் காவென்றானே தரு-6 மோகனராகம் அடதாளச்சாப்புத் தாளம் பல்லவி ராமனைத் தருவாய் - செகரட்சக ராமனைத் தருவாய் (ராம) அநுபல்லவி தாமசம் செப்பாதே-தசரதேந்திரா இப்போதே (ராம) சரணங்கள் 1. அரன்பக்கம் செல்வேன் அரிமுன்னே சொல்வனே் இரண்டும் தப்பினால் உனைவிட் டெவரால் பகை வெல்வேன் (ராம) 2. தாடகைப் பாவி தவிர்த்தாள்என் வேள்வி பீடைவராமற் காத்தாற் பிழைக்குமென் ஆவி (ராம) |