பக்கம் எண் :

34

3.   உம்பர் வி           சாரம்
          ஒழிக்க அந்    நேரம்
     சம்பர னைக்கொன்றாயே
          தயவாய் இந்    நேரம்              (ராம)

4.   கோபத்தில்          ருத்திரன்
          குருவிசுவா      மித்திரன்
     ஆபத்துக் காக்க வேணும்   
          அதனால் உன்   புத்திரன்        (ராம)

-------

சக்கிரவர்த்தி அதை மறுத்தல்

விருத்தம்-8 

சொல்லிது முனிவர் சொல்லத் துடித்தனன் தசர தேந்திரன்
சில்லிது வேள்விக் காகச் சிறுபிள்ளை ராமன் ஏன்தான்
சல்லியம் செய்யும், அந்தத் தாடகை தனைநான் கொல்வேன்
பல்பல உரையேன் திராணி பார்என்பான் நேர்என் பானே.

தரு-7

ஸ்ரீராகம்                             அடதாளச்சாப்புத் தாளம்

பல்லவி    

     ராமன் இதுக்கோ அவன்வர  வேணும்
     நான் வருகிறேன்           காணும்         (ராம)

அநுபல்லவி

     பூமிஅரச னென்றுநான் இருந்தென்ன    கொள்ளை
     சாமிஅவன்கை ஏந்துகுழந்தைப்         பிள்ளை   (ராம)

சரணங்கள்

1.    ஏனிந்த                  தோத்திரம்-தாடகை
          எனக்கெம்           மாத்திரம்
     வானுளோர் வந்துதடுத்தாலும் அடிக்கிறேன்
          நானே வந்துன் வேள்வியை முடிக்கிறேன்     (ராம)

2.    பேயைக் கொல்வ               தரிதோ-காரியம்
          பெரிதோ வீரியம்          பெரிதோ
     ஆயுதம் பிடிக்கறியான்கேளாய்ஒரு  சொல்லை
          வாயில் முலைப்பால் மணம்மாற வில்லை      (ராம)