35 3. கவலைஏன் கொண்டாய்-என்முன்ஒரு காலும்வராள் கண்டாய் அவளையும் படையையும் அடிக்கிறேன் பாராய்பாராய் இவனால் என்ன எழுந்திரு வாராய்வாராய் (ராம) -0-0- வதிஷ்டர் தகவுரைத்தல் விருத்தம்-9 இனமதில் அயோத்தி வேந்தன் இதுசொல்ல விஸ்வா மித்திர முனிவனும் கோபம் செய்தான் முன்னின்ற வதிஷ்டன் கண்டான் உனதுமைந் தனுக்கு மன்னா யோகநாள் வந்த தென்று கனமுடன் விரித்துச் சொல்லிக் காட்டுவான் கூட்டு வானே தரு-8 முகாரி ராகம் ஆதிதாளம் பல்லவி மோசம் வாரா தைய்யா-நான்சொன்ன வார்த்தை மோசம் வாரா தைய்யா (மோச) அநுபல்லவி கோசிகன் பின்னே ராமனைக் கூட்டி விடுவாய் சொன்னேன் (மோச) 1. உப்புநீர் மேகம் சேர்ந்தால் உலகிற்பிர வாகம் அப்படிஉன் மகனுக்கு அடித்ததே யோகம் (மோச) 2. மறுவுண்டோ வதிஷ்டன்சொல் வாத்தைக்கும் ரண்டோ பொறுபொறு முளைப்பாரைப் புதைப்பாரும் உண்டோ (மோச) 3. சோதிக்க வேண்டாம்நான் சொல்வதே சீலம் ஆதித்தன் குலத்திற்கின் றனுகூல காலம் (மோச) |