36 கௌசிகர் இராமனுக்கு நீதிசொல்லுதல் விருத்தம்-10 முனிவதிஷ்டன் இவ்வாறு சொல்ல வேந்தன் முறையாலே ராமனைலட் சுமண னோடே இனிதழைத்துக் கூட்டி விட்டான் வழிக்கிவேண்டி இருவரும்மந் திரங் கொண்டார் வெயில் படாமல் தனிநடந்தார் வேள்வியில்தா டகையும் வந்தாள் சாமியும்பெண் எனநினைந்தான் முனிவன் அந்த நினைவறிந்தான் பெண்இவளோ அல்ல ராமா நில் என்றான் இப்பொழுதே கொல் என்றானே. தரு-9 கலியாணிராகம் ஆதிதாளம் பல்லவி பெண் இவள் அல்ல ராமா தாடகை வண்ணங் கெசண்டநமன் இவள் ராமா (பெண்) அநுபல்லவி மண்ணில் மெத்த உயிரை வதைத்த நிர்ம் மூடி கண்ணில் கண்டது கோடி காணாத னந்தம் கோடி (பெண்) சரணங்கள் 1. இஷ்டமா முனிவர் என்றொரு பேராதரித் திருக்கும் கடலுக் கிவள் பெருத்தமந் தரகிரி அஷ்டகாசம் செய்தால் அதுவொரு பாடாவிரி அண்டகூட மெங்கும் இடியுமே அரிகரி எட்டுத் திசையிலும் ஓடி முட்டுமே இவள் ஆதாளி முட்டினால் மலையும் பிளந் திட்டுமே தூளி தூளி எட்டியும் பார்க்கக் கூடமோ கிட்டி ஒரு காளிகூளி விட்டுநான் சொல்ல வேணுமோ மட்டில்லாப் பாவசண்டாளி(பெண்) 2. ஆயிரம் குணம் ஒரு லோப குணத்தால் தட்டும் அதுபோல் இம் மருதத்தை அழித்தாலும்அழிக் கட்டும் மாயை இவள் பேர்சொன்னால் முனிவர்க்கும் பல்லு கிட்டும் வற்றல் என்றேம் மைத்தள்ளி வைத்தாலே இம் மட்டும் |