பக்கம் எண் :

37

தூயதிசையானை எட்டும் ஈயெறும் பாய் விழக்      காட்டி
வாயில் ஒருபல் லிடுக்கிலே அடக்குவாளே         கூட்டி
தீயவடவாக் கினிபோல் பாயுவாள் கைகளை        நீட்டி
பேயையும் பிடுங்கித் தின்னும் பேயென வந்தவெள்  ளாட்டி(பெண்)

3. ஒருகுமதி யென்னும் பெண்ணைப் பிளந்தான் இந்திரன்  அப்போது
     ஒருபெண் கியாதியை மாயன் ஒழித்தானே          புவிமீது
  பெருமானே இவள் அந்தப் பெண் எனவும்            கூடாது
     பெண் என்றால் பேயும் இரங்குமே அதிவ          ளுக்கேது

இருடிகள் உடம்பை மெத்த உருகை என்று கண்டுகொண்டே
பெருமகம் செய் வோரைக் கொல்ல வருகிறாள் இதென்னமுண்டே
நிருதி இவளைப் பெண் ணென்று கருதுகிறாய் என்னகண்டோ
ஒரு நொடியில் கொல்ல வேணும் குருமொழி தனக்கும்ரண்டோ(பெண்)

------

தாடகை முதலானவர்கள் வதம்

விருத்தம்-11

செய்தி களைஇவ் வாறுரைக்கச் சிரமேற் கொண்ட ரகுராமன்
வெய்து வணங்கிக் குருவிசுவா மித்திரன் சொல்லே வேதச்சொல்
மையம் எனவே மகங்காக்க வரிவில் வளைத்தான் தாடகையும்
எய்த பாணம் பட்டுருவி எழுந்தாள் மலைபோல் விழுந்தாளே
 

தரு-10

நாமநாதக்கிரியைராகம்                     அடதாளசாப்புத்தாளம்

பல்லவி

கொடிய தாடகை பாவி விழுந்தாள் - பொல்லாக்
கொடிய தாடகைபாவி விழுந்தாள்                 (கொடி)

அநுபல்லவி

கொடிய தாட கைபாவி விழுந்தாள் - செம்பொன்
முடியன் ராவணன் வெற்றிக் கொடிவிழுந்தாற்போல்  (கொடி)