பக்கம் எண் :

310

திபதை-3

பந்துவராளி ராகம்                         அடதாளசாப்பு

கண்ணிகள்

1. என்னசெய்வேன் நான் என்னசெய்வேன் நான்
     என்னசெய் வேன்மிதிலை             அன்னமே
  மன்மதன் கணையாலே பட்டுவிழுவேன் என்று
     மலரயன் வகுத்தானோ                முன்னமே

2. அங்கம் நையவும் விட்டுப் பெண்கள் வையவும் காமன்
     அம்பா லெய்யவும் சிந்தை             நோகவோ
  திங்கள்சுடவும் பனை அன்றில் சுடவும் வீசும்
     தென்றல் சுடவும் வெந்து              போகவோ

3. ஆலைக்கரும்பு போலும் வேலைத்துரும்பு போலும்
     ஆசை வலையிற்சிக்கி                மாயவோ
  மாலைக்கும் காலைக்கும் ஊண்உறக்கம் இல்லாமல்
     வரவர நாளுக்குநாள்                 தேயவோ

4. அந்தூதும் நெல்லானேனே நொந்துநொந்து போனேனே
     அனுக்கிரகம் நீ செய்ய                வேணுமே
  சந்தோஷமாகப் பாராய் என்தன் கவலை தீராய்
     சாஷ்டாங்க தெண்டனிட்டேன்          காணுமே

5. மறக்குமோ உனதாசை வார்த்தைஒன்ற ருளாயோ
     வானோர் பழிக்கநின்று               கூசவோ
   பிறக்கும் பிறக்குந்தலை முறைக்கெல்லாம் ராவணனோர்
     பெண்ணால் இறந்தானென்று           பேசவோ

6. பதியும் உனதெனது நிதியும் உனது சொன்னேன்
     வணங்குமென் கவலையைத்            தீர்த்திடாய்
  நானே உன்னைப் பணிந்தால் பதினால் உலகுக்கும் நீ
     நாயகி ஆமல்லோ                   பார்த்திடாய்

7. கண்ணும் கருத்தும்நீயே மன்மதன் செய்யும் போரைக்
     காட்டிலும் நல்லதெம                 வாதையே
  எண்ணந்தப்பிப் போனேனே நாயிலும் பேயானேனே
     எனக்கொரு புத்தி சொல்லாய்          சீதையே