பக்கம் எண் :

311

சீதாதேவி இராவணனை இடித்தல்

விருத்தம்-9

மிண்டாளன் அரக்க னிந்த வீண்வார்த்தை சொல்லச் சொல்ல
கண்டாளன் சனகியுமென்றன் காகுத்தன் சரத்தினாலே
உண்டான தெல்லாம் தோற்க ஊழிவந் தடுத்ததையோ
சண்டாளன் எனக் கோபித்துத் தள்ளுவான் விள்ளுவாளே.

தரு-7 

மோகனராகம்                             ஆதிதாளம்

பல்லவி

ராட்சதப் பதரே துன்மார்க வார்த்தைகள்
ஏற்குமோ போடா - ராட்சதப்பதரே                   (ராட்)

அநுபல்லவி

காட்சியா   என்னைப்       பார்க்காதே-இந்த
தாழ்ச்சி    ஆம்பழி        ஏற்காதே-உன்
வாழ்ச்சி   வீணிலே        போக்காதே-அர
சாட்சி     ஆனதைத்      தோற்காதே              (ராட்)

சரணங்கள்

1. கிளைக்கும் மூன்று லோகமும் செலுத்தும் உன்கோலும் உன்தன்
     கீர்த்தியும் ஏன் தொலைக்கிறாய்-கெருவத்தாலே
  வெளிக்கப கீர்த்தியாகப் பாவபுண்ணியமும் பாராமல்
     விருதாவிலே ஏன்     குலைக்கிறாய்-ஆகாசமட்டும்
  அளக்கும் இருப்புத் தூணைச் செல்லரிக்குமோ இத்தை
     அறியாமல் ஏன்       மலைக்கிறாய்-அக்கினிதன்னில்
  குளித்துத் தவங்கள்செய்து பெற்றவரத்தை யெல்லாம்
     கொஞ்சத்தில் ஏன்     கவலைக்கிறாய்-அடசண்டாளா
     வளர்த்திய வார்த்தைகள்    படியாதே-தணல்
     ஒளிக்கமுன் தானையில்     முடியாதே-என்னை
     இளக்கார மாக்கிடத்        துணியாதே-எரி
     விளக்கினில் பூச்சிபோல்     மடியாதே-அட   (ராட்)