312 2. காயத்துடன் பிறந்த தங்கை மூக்கும் முலையும் காதும் அறுக்க விடுத்தாய் வெளி நில்லாதென் நாயகற் கஞ்சியந்த மாயமான் பின்னெதிரிட்டு நாய்போற் பதுங்கி அடுத்தாய்-நமன்போலும் உன் தீயரூபத்தைக் கண்டு மூர்ச்சையாய்ப் போனஎன்னை தீண்டாமல் மண்ணோ டெடுத்தாய் கொல்வேன் என்றுமேல் பாயும் சடாயுவாலே பூனைவாய் எலிபோல்உன் பவிஷெல்லாம் பறி கொடுத்தாய்-அடசண்டாளா தாயிவள் எனமனம் அறியாதோ-போடா யேயே இம்மாத்திரம் தெரியாதோ-என்னைத் தீயுரை சொன்னநாக் கெரியாதோ-பத்து வாயிலும் புழுவரச் சொரியாதோ-அட (ராட்) 3. குதிக்கிறாய் சும்மாப் போமோ இப்பாவம் பின்னுக்கொன்று கோடியாய் வந்து வாய்க்குமே-உன் செல்வமெல்லாம் செதுக்கிற அரம்போல்என் பொறுமை ஆகிறதர்ம தேவதை தானே தேய்க்குமே-உன்குலந்தன்னை மதிக்கா எட்டியைக் கூடி இலவுந்தீபட்டாற் போலென் வயிற்றெரிச்சலே தீய்க்குமே என்பிராணநாதர் விதிக்கும் பாணம் என்தன் தலையைப் பனங்குலைபோல் வெட்டி வெளியிற் சாய்க்குமே-அடசண்டாளா அதற்குள்ளே துள்ளிச் சாகாதே-இந்த பதைப்பினால் ஒன்றும் ஆகாதே-வாய் மதத்தினால் கெட்டுப் போகாதே-நாளைக் கொதிக்கும் நரகத்தில் மூழ்காதே-அட (ராட்) ----- சீதாதேவி தனியே புலம்பல் விருத்தம் 10 சானகிஇப் படிவைய அரக்கன் சீறித் தான்நடந்தான் அரக்கியரைக் கலைக்கச் சொன்னான் ஆனதுகண் டனுமானும் இவனை இங்கே அடிப்பெனென்று கையொடுகை பிசைந்தான் அப்பால் |