313 தானொருமந் திரம்செபித்தான் மாதரெல்லாம் சவம்போல உறங்கிவிட்டார் அந்தவேளைக் கானகத்தில் இளங்குழந்தை போலே சீதை கரங்குவாள் தனியேதான் இரங்குவாளே. திபதை-4 ஆனந்தபைரவி ராகம் ஆதிதாளம் கண்ணிகள் 1. தேற்றுவாரில்லை ஆற்றுவாரில்லை தெய்வமேஎன்ன செய்குவேன் ஏற்றும் அரக்கியர் வார்த்தை இடும்பைவிட்டு எந்தநாள் இனிஉய்குவேன் 2. சொந்தவீட்டில் இரு என்ற சாமியைத் துடுக்குச்சொல்லி எழுந்தேனே அந்த வினைக்கிந்த இலங்கையிலே பொல்லா அருஞ்சிறையில்விழுந்தேனே 3. தம்பிமார் அன்னைமார் எல்லாரையும் தவிக்கவிட்டு வந்தபோதே என்பொருட்டில் அவர்க்கிங்கே வரமனம் ஏன்வருமோ வாராதே 4. நிறைதவ சுக்குக்குறை இவளென்று நினைந்துகை விடுவாரோ பறையர் ஊரிலே சிறையிருந்த என்னைப் பரிந்துகை தொடுவாரோ 5. தாழ்வு செய்தேனோ தெய்வமே என்பதன் சாமிநெஞ்சைஉருக்காயோ பாவிஉயிரே என்சாமி திருமுகம் பார்க்கும் மட்டும் இருக்காயோ 6. ஏதுகாண் இவர் அரக்கிமார்களோடே இந்தப் பேரிடுவான் ஏனோ நாதன்பிரியவும் இன்னம் இருந்தேனே நானல்லோ அரக்கிதானே 7. தந்தை சனகனும் இந்த வினைகண்டு தன்னுயிரும் பிழைப்பானோ அந்த இளைய கொழுந்தனும் என்னை அருமைசொல்லிஅழைப்பானோ 8. புல்லும் பூமியும் உள்ளமட்டும் இந்த பொல்லாப்பழி சிறந்தேனே சொல்லுவார் சொல்லும் வசைக்கெல்லாம் ஒரு தோதகிபெண்பிறந்தேனே |