315 2. அதிசெயமுடன் பளபளென்றில குகண் ணாடிநி கர்த்தக போலமும் மதிகள் ஒருசத் கோடிக்கு மேலான மங்கள் மலர்முகக் கோலமும் கதியென்றெடுத்தவர்க்கு பதியும் நிதியும்தரும் கருணாநயனவி சாலமும் குதிகொளும் பவளவாயும் சிறுநகையும் குருமந்தகாசவி லோலமும் புதுமலையினில் விழும் பொன்னருவி யைப்போலும் பூமணிமார்பினிற் புரளுமுப் புரிநூலும் எதிரில்லாதகோ தண்டமும் ஒருகாலும் எழுத வேண்டுமென்றால் ஆமோமன் மதனாலும்(அந்த) 3. பெருத்த தாமரை இலைபோ லேஒளி பெருகிய மேனிச்சிங் காரமும் வரித்த சிந்துர ரேகையும் புருவமும் வளர்ந்த நெற்றிவிஸ் தாரமும் பருத்ததிருமுடி வேணியும் வேணியில் பசுந் துளவமலர் ஆரமும் தரித்த திருவாழி கொடுத்துன் சேதியை தனியே என்னுடன் சொன்ன சாரமும் திருத்திச் சொல்ல ஒருவாயில்லை ஒருவாயே தெரிந்தும் தெரியாமலும் சொன்னேன்நீ பொறுப்பாயே ஒருக்காலே உண்டவர் மகிமைநீ அறிவாயே உனக்குத் தெரியும் வேதம் தனக்குத் தெரியும்தாயே(அந்த) சீதாதேவி லட்சணியை தெரிசித்தல் விருத்தம் 12 நாட்டிலே இந்தவண்ணம் ராமர்க்குள்ள நற்குறியெல் லாம் சொன்னான் நாடுவிட்டுக் காட்டிலே நடந்ததுவும் சுருங்கச் சொன்னான் கரதலா கமலம்போல் அனுமான் பின்னே ஆட்டிடும் பசியாலே விழுந்தோர் கையில் அண்டர்உல கத்தமுதம் ஈந்தாற் போல நீட்டினான் திருவாழி அதனைக் கண்டாள் நிசங் கண்டாள் சீதைபர வசங் கொண்டாளே |