316 தரு-9 சங்கராபரணராகம் அடதாளசாப்பு பல்லவி கொண்டாளே-சாமிமோதிரம்-கண்டாளே (கொ) அநுபல்லவி எண்டிசை போற்றிய இலங்கா புரத்திலே என்அனு மானிட பொன்னிரு கரத்தாலே சரணங்கள் 1. கந்தமலர்க்குழல் மேலே சூடி கண்ணுக் குக்கலத்தண் ணீர்விட்டு காணக் கிடைத்ததே கார்த்திகை பிறைபோலே கண்டேனே என்று முறைபட்டு அந்தராம மந்திரம் எழுதிய அடையாளமோ திரந்தொட்டு அணைத்து முலைமேல் இணைத்துடம் பிலே அடங்காமகிழ் ச்சிகொண்டடிக்கடி முத்தமிட்டு (கோ) 2. எரிந்தபசியால் வருந்தும் நாகம்முன் இழந்த மணிதனை அடுத்தாற்போல் ஏதினிமேல் வாராதென் றொழிந்தவர் எறிந்த உடைமையைக் கண் டெடுத்தாற்போல் பெருந்தரையிலொரு கால்மேலே நின்று பிள்ளை பெற்று மலடி படுத்தாற்போல் பின்னும் முன்னும் தோன்றாமல் தவிக்கிற பிறவிக்குரு டனுக்குத் தெய்வம்கண் கொடுத்தாற்போல்(கொ) 3. சிந்தாகுலம் விண்டேன் உன் திருவாக் கால்என் குறையாற்றி தீயராவணப் பாவிஊரிதைத் தேடிவந்தா யேஎன் மனந்தேற்றி தந்தாயேஎன் சீவனை உனக்கினித் தருவதென் னஇதற் கெதிர்மாற்றி தாயும் தந்தையும் குருவும் தெய்வமும் சகலமும் நீயே என்றனுமானை வாழ்த்தி (கொ) |