318 2. அறிகிற தூதர்தம்மை அந்தந்தத் திசையில் ஏவி நெறியே தெற்குத் திசைக்கு நீபோ என்றென்னைக் கூவி பொறியே ஆரும் மோதிரம் கைபோட்டதுதந்து தேவி குறிகுணம் எல்லாம் சொல்லக் கொண்டுதென்திசை தாவி முறைமுறையே வெகு தேசமெல்லாம் அலைந் தெட்டினேன்-என்னோட பிறகு செல்வாரை வாராதிரு மென்று தட்டினேன்-அந்நேரம் தரையிலிருந் தாகாசமளவுப்போய் முட்டினேன்-மயேந்திர பருவதமேல் நின்று பாய்ந்திலங்காபுரி கிட்டினேன்-கோட்டைக்குள் குறுகுறென நடக்கிய வேளையிலெதிர் கொண்டிடும் லங்கணி தொண்டையும் மண்டையும் நெற நெறெனநெரிந் திடவே ஊர்விட்டு நீங்கினள் ஆவியை வாங்கினன் நானே (கேள) 3. அகழும் இலங்கை யெல்லாம் அணு அணுவாகச் சுற்றி தகைசேரும் மத்திட்ட தயிர் போலவேஎன் புத்தி நிகழும் வேளையில் ராமநேசம் வந்தது பற்றி மகிழவே நான்அசோக வனத்தில் வந்தேனே ஒற்றி வகையுடனே ராவணன் வந்துன் எதிர்படித்ததும்-சண்டாளா அகலநில்லடா என்றுநீ வாய்மேல் அடித்ததும் அம்மாஉன் முகமலர்மேல் இருகண்ணால் முத்துகள் வடித்ததும்-அடியேன் சகலமும் அறிவேன் உனதிடதுபுறம் துடித்ததும்-இதெல்லாம் பகலவன் முன்பனி ஆய்விடும் மெய்யே பாவி அரக்கர்கள் வாழ்வதும் பொய்யே செகமுழு திலும்ஒரு திருவுள மேபொது தென்மொழியே அம்மா என்வரலாறிது (கேள) ----- அனுமார் சீதாதேவியை வரங்கேட்குதல் விருத்தம்-14 சொல்லிஇந்த வகையனுமான் பின்னும் என்தன் தோள்மேலே எழுந்தருள்வாய் அங்கே பாய்வேன் அல்லதிலங்கை யோடெடுப்பாய் எனினும் செய்வேன் அரக்கரை வேர்பிடுங்கெனினும் கணத்திற் செய்வேன் |