319 பல்லரக்கர் சிறையினிலே கண்டான் மீட்கப் பயப்பட்டான் உயிரைக் காப்பாற்றினான் என்று எல்லவரும் சொலப் போகேன் தாயேசீதை ஏதென்றான் இதற்குவகை ஓதென்றானே ----- அனுமாருக்குச் சீதை மறுமொழி கூறுதல் விருத்தம்-15 எண்ணி அனுமானிந்த வார்த்தை சொல்ல எனைஒருவரும் தொடப்போ காதுகண்டாய் மண்ணதைத் தொட்டரக்கன்எனை எடுத்தான் கண்டாய் வலியகோதண்டபதி அவர்பேர் கண்டாய் நண்ணி என்றன் சிறைஅவரே மீட்டிடாமல் நடைத்தூதன் மீட்டால் எப்படியாம் கண்டாய் கண்மணியே மகனே என்றவனை நெஞ்சம் கரைக்கின்றாள் சீதை கனிந்துரைக் கின்றாளே தரு-11 சௌராஷ்டிர ராகம் ஆதிதாளம் பல்லவி இம்மாத்திரம் செய்வாய் அனுமானே-என்னைவேண்டி நீ இம்மாத்திரம் செய்வாய் அனுமானே அநுபல்லவி சும்மாவிட்டு விட்டாலே தோஷம் உண்டு தன்மேலே சரணங்கள் 1. வேடிக்கைக்கோ பிடித்தார் வில்லு-அவர்க்கிந்த ஊர் ஈடோ இதெல்லாம் ஒரு சில்லு-நான் சபித்தாலும் காடாகாதோ இலங்கைக் கல்லு-துணிந்தவர்க்குப் பாடோ பிராணன் என்னஓர் புல்லு-அந்தூதிப் போட்டுக் கூடுமாத்திரம் இருந்த நெல்லு-போலே ஆனேனே ஓடிப்போய் சாமி முன்னே நில்லு-அவருடனே கூடவே அயோத்திக்குச் செல்லு-என்னை எங்கென்று தேடும் மாமியார்க்குநான் தெண்டனிட்டேன் என்று சொல்லு (இம்மா) |