பக்கம் எண் :

320

2. குருவார்த்தையாக உன்மேற்     பாரம்-போட்டுச் சொல்கிறேன்
     ஒருமாதம் நிற்கும்என்ச      ரீரம்-கல்யாணம் செய்த
  பெருநாளில் என்மனைவி       சாரம்-அறிந்துகைமேல்
     பரவசம் சொன்னாரே விஸ்  தாரம்-அத்தை நம்பிநான்
  வருவாரல்லோ இத்தனை  தூரம்-என்றிருந்ததை
     தெரியாமல் ஊர்க்குப்போம்  அந்நேரம் நீயும் கூடப்போய்
  அருகே நான்சொன்னஉப       சாரம் சொன்னபின் கங்கைக்
     கரைக் கண்டால் சீதை கடனும்
     கழிக்கச் சொல்வாய் உப காரம்              (இம்மா)

3. ஆதியில் பொன் மானுக்கா          வாது சொன்னதுண்டந்த
     வேதைபொறுக்கச் சொல் என்     மீது பெண்களுக்கெல்லாம்
  பேதைமை என்பதுவி               டாது-அதுகொண்டென்ன
     வேதன்சொன்ன சாபம்பொல்      லாது-என்னை ராவணப்
  பாதகன் அணுகக்கூ                டாது-என்று திரிசடை
     மாதா உரைத்தாள்பயம்          ஏது-என்றிருந்தாலும்
  மேதினிவாய் மூடப் போ            காது-ஆகையினாலே
     சீதாராமன் தன் பேரைச்
     செலுத்தச் சொல்வாய்இப் போது          (இம்மா)

-----

அனுமார் சீதாதேவிக்குத் திடம்கூறல்

விருத்தம்-16

    வடித்துவடித் தன்னையிந்த வார்த்தை சொல்ல
          மாருதியும் நகைசெய்வான் விழல் கூளத்தை
    இடிப்பதுபோல் அரக்கர்தம்மை இடிக்கச் சேனை
          எழுபதுவெள்ளமும் சேரும் எனது தோள்மேல்
    அடித்தலம் கொண்டென்சாமி சேர்வார் தம்பி
          அங்கதன் தோள் மேற்சேர்வார் அவர் அம்பாலே
    பொடிப்பொடியாய் ராவணனும் தரையில் சேரும்
          போரும்வரும் பாரும் எனப் புகலுவானே