321 தரு-12 சாரங்காராகம் ஆதிதாளம் பல்லவி எட்டு நாளையிலே பாரும்-அம்மா ராவணன் பேரும் இவன் ஊரும் (எட்டு) அநுபல்லவி இஷ்ட காலம்வந்த திரங்க வேண்டாம் நீரே எப்போதும் போலே ராமர் இடத்தினிற் சேருவீரே முட்டாத வானரர்கை தொட்டே கல்லெறிந்து முட்டாள்கள் துஷ்டர்கள் கெட்ட பலிஷ்டர்கள் இட்டிடுகட்டுகள் ஒட்டுகள் கெட்டபின் நெட்டுளபட்டண மட்டி அரக்கியர் கட்டிய பொட்டுகள் தொட்டறு பட்டிடும் (எட்டு) சரணங்கள் 1. மலர்தலை உலகெலாம் வாழ-மண்மேல் மண்டோதரி அலறி வீழ-எங்கும் அலகையும் நாயும்வந்து சூழ-காவல் அரக்கியர் உனதுவெள் ளாட்டிகள் போலே தாழ அந்தர துந்துமி இந்திரன் அறைந்திட என்தன் முகுந்தன் நெடுந்தளம் வந்தபின் உன்தன் வருந்திய சிந்தை மகிழ்ந்திட இந்த இலங்கை அழிந்திடும் விந்தையை (எட்டு) 2. ஆகா ராட்சதப் பிரேதம் மேலே-மிதக்க ஆகுமே ரெத்தங்கடல் போலே-அதில் காகங்கள் மூழ்கி ஒருக் காலே-மாதர் கண்ணீரால் அந்தரத்தம் கழுவிப் போமேஅப் பாலே கங்கிலும் வங்கிலும் நுங்கு தலங்களும் மங்கையர் தங்கிந டங்கொள் அரங்கிலும் அங்கிலும் இங்கிலும் எங்கிலும் எங்கள்கு ரங்கு நெருங்கி இடுங்கல கங்களை (எட்டு) |