பக்கம் எண் :

322

3. ஆனை சேனைகளை நான் சாட-குரங்கால்
     அரக்கர் தலையெல்லாம் பந்தாட-ஒருவர்

  போனவழி போகாமல் ஓட-இந்தப்
     பொல்லா ராவணன் வாழ்க்கை
     எல்லாம் தம்பியைக் கூட

புத்திரர் மித்திர களத்திர இனத்தவர்
சுற்றி வயிற்றில் அடித்து விழத்தலை
பத்தும் நரித்திரள் தத்தி இழுத்திட
வித்தகன் அஸ்திரம் அறுத்திடும் வெற்றியை   (எட்டு)

------

சீதாதேவி அனுமாருக்கு அடையாளம் ஈதல்

கொச்சகம்-2

உன்னித்தான் அனுமன்இந்த உறுதிசொல்ல மனந்துணிந்தாள்
வண்ணமுள்ள அணிசூடா மணிகொடுந்தாள் சாமிஅவள்
என்னசொன்னாள் எனக்கேட்கில் ஏதுரைப்பாய் எனச்சீதை
சொன்னபடி அடையாளம் சொல் என்று சொல்வாளே

தரு-13

ஆனந்தபைரவிராகம்                           ஜம்பைதாளம்

பல்லவி

   அனுமானே சாமிக்கிந்த
   அடையாளம் சொல் ஐயா                       (அனு)

அநுபல்லவி

சனகி இலங்கைச் சிறையினில் தன்னுயிரைத்தானே தின்று
மனதில் ராமாமுர்த சீவனம் செய்திருக்கிறாள் என்று      (அனு)

சரணங்கள்

1. உலகறிய நகரைவிட்டுக் கோட்டைவாசல் கடக்குமுன்னே
     ஓங்குவனம் எங்கேஎன்று நான் கேட்க-நேரே
  தொலைதூரம் வழிநடந்தாய் சமர்த்துநீ என்று சொல்லி
     துளிரான வாய்மலர்ந்து குளிரநகை செய்தாரே       (அனு)

2. தாழ்வில்லா நகர்நீங்கி வருகிற பேர் எல்லோரும்
     தனித்தனியே துணிவுசொல்லி அனுப்பினார் பொய்யோ