323 சூழும்அந்த வழிநடுவே வேள்விசெய்ய வேணுமென்று தொடங்கும் வேதியனாசை அடங்கப்பசு கொடுத்தார் ஐயோ (அனு) 3. கனமான கங்கைக்கரை வனவேடன் முன்எங்களைக் காட்டியிவர் ஆரென்றுநீ கேட்டாயே குகனே உனதுதம்பி எனதுதம்பி உன்கொழுத்தி இவள் நானும் உன் ஆசைத் தோழன்என்று சொன்னாரே மகனே (அனு) 4. உளத்தில் மறுமாதர் குறிக்கேன் என்றந்தரங்கம் உரைத்தார்என் சாமிக்கது கருத்தில் உண்டுதானே வளர்த்த கிளியும் மானும் தளர்ச்சி இல்லாதபடி வைத்திருக்கச் சுமந்திருடன் பத்திரமாகச் சொன்னேனே (அனு) 5. ஒருநாள் என்மேற் பாய்ந்த காக்கைதனை நோக்கிப் புல்லால் ஒருகணை விட்டார்இதென்ன தெரியாது போச்சோ சரணம் என்றதுவீழ இருவிழிக்கும் ஒருமணியாய் தாமே கொடுத்தாரே அந்த மானமுந்தான் எங்கே போச்சோ(அனு) ----- அனுமார் அசோகவனம் அழிக்குதல் விருத்தம்-17 முந்தித்தாய் சீதைசொன்ன அடையாளங்கள் முறைகொண்டான் அனுமந்தன் நிறை கொண்டங்கே சிந்தித்தான் ராமலட்சு மணரை எங்கள் சேனையுட னேகொண்டு வருவேன் வந்தால் பந்தித்த ராவணனும் படையும் காலன் படைக்காவார் தாயேநீ பாரென் றோதி வந்தித்தான் அச்சூடா மணியைக் கொண்டான் வழிக்கொண்டான் அசோகவனம் அழிக்கின்றானே தரு-14 பியாகடைராகம் ஆதிதாளம் பல்லவி அடித்தானே அசோகவனம் தன்னை முடித்தானே அனுமான் (அடி) |